ஈரான் மீது பொருளாதாரத் தடை : ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் சேர்ந்து 2015ம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தது ஈரான் நாடு. அந்த ஒப்பந்தத்தின் படி, ஈரான் நாடு அணு ஆயுதங்கள் எதையும் தயாரிக்காது என்று கூறி கையெழுத்திட்டிருந்து ஈரான். ஈரானின் இந்த ஒப்பந்தம் படி ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கிக் கொண்டது உலக நாடுகள்.
ஈரான் மீது பொருளாதாரத் தடை இன்று முதல் நடைமுறை
ஆனால் அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரெம்ப் பதவியேற்ற பின்பு , ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்று கூறி அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா. மேலும் உலக நாடுகள் யாரும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்ப் பொருட்களை வாங்க தடை விதித்திருந்தது அமெரிக்கா.
இந்தத் தடைகளை அறிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இந்தத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மதிப்பளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மனிதநேய உதவிகள் உள்ளிட்ட சில பரிமாற்றங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாகவும் மைக் பாம்பியோ கூறினார்.
8 நாடுகளுக்கு விதி விலக்கு
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்கா. அதில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி, இத்தாலி, க்ரீஸ், மற்றும் தைவான் நாடுகள் இடம் பெற்றுள்ளன.
ஆனாலும் இந்த விதி விலக்கானது வெறும் 6 மாதங்களுக்கு மட்டுமே. கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் நேரடியாக அதற்கான பணத்தினை ஈரான் நாட்டு வங்கிகளில் செலுத்த முடியாது. மாறாக வெளிநாடு வங்கிக் கணக்கிலேயே செலுத்த முடியும். அந்த பணத்தினை மனித நேய செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஈரானிடமிருந்து பெட்ரோல் வாங்க இந்தியாவிற்கு தடையில்லை