Omar alias Sanaul Haq: Omar alias Sanaul Haq dies: al-Qaeda in the Indian subcontinent dies
செப்டம்பர் 23 ம் தேதி அமெரிக்க-ஆப்கானிஸ்தானின் கூட்டுப்படைத் தாக்குதல் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்தின் (AQIS) அல்-கொய்தாவின் தலைவர் அசிம் உமர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஹெல்மண்ட் மாகாணத்தின் மூசா காலா மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடந்ததாகவும் அறிவுப்புகள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் தெரிவிக்கையில், கொல்லப்பட்ட உமர் பாகிஸ்தானியர் என்றும், உமருடன் சேர்ந்து பல பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில், அசிம் உமர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். டெல்லியின் கிழக்கே 150 கி.மீ தொலைவிலுள்ள உத்தரப்பிரதேசத்தில் சம்பல் மாவட்டம் தான் இவரின் பிறப்பிடமாகும்.
சம்பலைச் சேர்ந்த சனால் ஹக்:
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அல்கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரியால் இந்த அமைப்பில் மிகப்பெரிய இடத்திற்கு உயர்த்தப்பட்டவர் அசிம் உமர், இந்தியாவில் சனால் ஹக் என்ற பெயரில் 1960 களின் பிற்பகுதியில் அல்லது 1970 களின் முற்பகுதியில் பிறந்தவராவார். சம்பலில் மாவட்டத்தில் உள்ள மொஹல்லா தீபா சாராய் கிராமத்தில் வசிக்கும் இர்பான்-உல்-ஹக் மற்றும் ருகையா ஆகியோர் இவரின் பெற்றோர்கள் ஆவார்கள்.
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் 2015 ஆம் ஆண்டில் இவரின் பெற்றோரை சந்தித்தபோது, 20 வருடங்களாக தனது மகனைப் பார்க்க வில்லை என்றும், உயிரோடு இருக்கிறாரா? அல்லது இறந்து விட்டாரா? என்பது கூட தங்களுக்கு தெரியாது என்றும் சொல்லினர். சில நாட்களுக்கும் முன் அதிகாரிகள் வீட்டைக் கண்காணிக்கும் போது தான் தங்களது மகன், உலகின் மிக மோசமான பயங்கரவாதக் குழுக்களில் ஒன்றின் தெற்காசியக் குழுவின் தலைவராக இருப்பதை இவர்கள் அறிந்துள்ளனர்.
மேலும் அவர் கூறுகையில், ” எனது தாத்தா ஒரு மாவட்ட நீதவானாகவும், தந்தை கிராமத்தின் தலைவர் பதவியில் இருந்ததாலும், எங்கள் குடும்பம் இப்பகுதியில் நன்கு அறியப்பட்டதாக இருந்தது”என்று கூறிகிறார்.
இர்பான்-உல்-ஹக்
நான் சிறு வயதில் இருக்கும்பொழுது, கிராமம் தொடர்பாக விவாதிக்க காவல் துறையினர் எனது வீட்டிற்கு வருவதுண்டு, ஆனால், இப்போது எனது மகனைத் தேடி வருவதை நினைக்க எனக்கு வேதனையாக இருக்கின்றது. எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில், 1977 ம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடுப்பு தொடர்பாக நடைபெற்ற பயங்காரவாதத் தாக்குதல் எனது மகனை முதலில் காவல் துறையினர் எங்கள் வீட்டைத் தேடி வந்ததாகவும் நினைவு கூறுகிறார் இர்பான்-உல்-ஹக். அதன் பிறகு, வீட்டுக் கதவு எப்போது தட்டப்பட்டாலும் எங்களுக்கு படபடப்புத்தான் ஏற்படும் என்று வேதனை கொள்கிறார் இர்பான். 2015 ம் ஆண்டு நடைபெற்ற இந்த பேட்டியின் போதே வயது முதிர்வின் காரணமாக இர்பானால் நடக்க முடியவில்லை.
சனாவுல் ஹக் பற்றி அவரின் தாயார் ருகையா கூறுகையில், தாருல் உலூம் தேவ்பந்த் கல்லூரியில் படிப்பை முடித்தவுடன் சவுதி அரேபியா செல்வதற்காக ரூ. 80,000 கேட்டார். இது தொடர்பாக அப்பாவிற்கும், மகனுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிவர் இன்னும் திரும்பவில்லை. முதலில், நாங்கள் எங்கள் மகனைத் தேடினோம், நிலைமை கையைத் தாண்டி போகவே, தேடுவதையே நிறுத்திவிட்டோம், என்கிறார் ருகையா .
பாகிஸ்தான் வழியாக பயங்கரவாத பாதையில்
சனோல் ஹக் 1991 இல் தியோபந்த் செமினரியில் பட்டம் பெற்றவர். 1992 டிசம்பரில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜிஹாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பின் 1995 களில் குடும்பத்தினருடன் தொடர்புகளை முழுவதுமாக துண்டித்துக் கொண்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், சனோல் ஹக் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அவர் கராச்சியில் இயங்கி வரும், ஜாமியா உலூம்-இ-இஸ்லாமியா என்ற கல்லூரியில் சேர்ந்தார். ஜெய்ஷ்-இ-முஹம்மதுவின் தலைவரான மௌலானா-மசூத் -அஸாரை போன்ற முக்கிய ஜிஹாதி தலைவர்களை உருவான இடமும் இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
1980 ல் ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பால் ஏற்படுத்தப் பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீனிடம் சேர்ந்தார் சனோல் ஹக். ஆப்கான் போர் முடிவடைந்த பின்னர், முஜாஹிதீன் நோக்கம் ஜம்மு-காஷ்மீருக்கு மாறியது .
1990 களின் பிற்பகுதியிலிருந்து 2004 வரை, சனோல் ஹக் கராச்சி மற்றும் பெஷாவரில் ஜிஹாதிகளுக்கு கற்பிக்கும் பணியை மேற்கொண்டார். மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இயங்கும் முஜாஹிதீன் பயிற்சி முகாம்களிலும் பணியாற்றி வந்திருக்கின்றார் .
அல்-கொய்தாவும்- சனோல் ஹக்கும் :
பாக்கிஸ்தானிய அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் இஸ்லாமாபாத்தில் இயங்கி வந்த லால் மஸ்ஜித்தை அழிக்க உத்தரவிட்டதை அடுத்து, அல்-கொய்தாவை நோக்கி சனோல் ஹக்திரும்பத் தொடங்கினார்.
2013 ஆம் ஆண்டில், சனோல் ஹக் ஆற்றிய முதல் உரையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து பேசினார். இந்த பேச்சு, இந்தியாவில் முஸ்லீம்-விரோத வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தது. உதாரணமாக, “எனது செங்கோட்டை உங்கள் அடிமைத்தனத்தையும், இந்துக்களின் கைகளில் வெகுஜன படுகொலைகளையும் பார்த்து கண்ணீர் வடிக்கின்றது” என்ற சனோல் ஹக்கின் வார்த்தைகள் ஆழமாய் இருந்தன.
2014- ம் ஆண்டு அல்கொய்தாவை வழிநடத்திய அய்மான் அல்-ஜவாஹிரி, இந்திய துணைக் கண்டத்திற்கான அல்-கொய்தா ( ஏஎஸ்ஐகு ) என்ற பிரத்தியோக அமைப்பை உருவாக்குவதாகவும், அதன் தலைவர் மௌலானா அசிம் உமர் என்றும் அறிவித்தார்.
அசிம் உமரின் கீழ் செயல்பட்ட அமைப்பு தெற்கு ஆசியா துணைக் கண்டத்தில் பல்வேறு தீவிரவாத தாக்குதலை முன்னெடுத்து நடத்தியது. உதாரணமாக, ஷாஜகான் பச்சு வின் மரணக் கதையும் இதில் அடங்கும்.
சனோல் ஹக் தான் இந்த அசிம் உமர் :
புதிதாக அறிவிக்கப்பட்ட தலைவரான உமர் தான் இந்தியாவில் இருந்து தப்பி சென்ற சனோல் ஹக்கும் ஒன்றா ? என்ற கேள்விக்கு பதில் உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. சனோல் ஹக் இல்லையென்றால் அசிம் உமர் யார்? என்ற கேள்வி அனைவராலும் எழுப்பப்பட்டது.
ஏனெனில், சனோல் ஹக்தொடர்பான எந்த புகைப்படமும் யாரிமும் இல்லை( சிறு வயது புகைப் படத்தைத் தவிர ) . சனோல் ஹக் உரை நிகழ்த்தும் போதும் கூட முக மூடியோடு தான் காட்சி அளிப்பார். இருந்தாலும், புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய துணைக் கண்டத்திற்கான அல்-கொய்தாவின் தலைவர், பாகிஸ்தானை தளமாகக் கொண்டிருந்தாலும், ஒரு இந்திய நாட்டவர் என்ற சந்தேகமும் அனைவரிடமும் இருந்தது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஆசிப், மற்றும் ஒடிசாவின் கட்டாக்கில் வசித்து வந்த அப்துல் ரஹ்மான் என்ற இருவரும் இந்தியாவில் மற்றொரு வழக்கில் கைது செய்யப் பட்ட போது தான் , சிறு வயதில் இந்தியாவில் இருந்து தந்தையோடு சண்டை போட்டு சென்ற சனோல் ஹக்கும் , அசிம் உமரும் ஒன்றே என்பது உறுதி செய்யப்பட்டது.
முகமது ஆசிப் மற்றும் அப்துல் ரஹ்மான் இந்தியாவில் அல்-கொய்தா விதைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.