வீடற்றவர்களை, சுற்றுலாவாசிகளை வதைக்கும் ஆர்டிக் குளிர்!

நூரெம்பெர்க்கில் வீடற்ற பெண்மணி அவருடைய பிறந்த குழந்தையுடன் -15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காப்பற்றப்பட்டனர்

By: February 13, 2021, 4:05:43 PM

Arctic blast puts Europe’s homeless, travellers in peril : ஆர்டிக் காற்று ஐரோப்பிய பகுதியில் குளிர்ந்த சூழலை உருவாக்கி வருகின்ற நிலையில் கடந்த வாரம் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. மேலும் ஜெர்மனில் வீடற்றவர்களுக்காக செயல்பட்டு வரும் BAGW என்ற அமைப்பு வெள்ளிக்கிழமை அன்று குளிருக்கு வீடற்ற நான்கு நபர்கள் உறைந்து இறந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நூரெம்பெர்க்கில் வீடற்ற பெண்மணி அவருடைய பிறந்த குழந்தையுடன் -15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காப்பற்றப்பட்டனர் என்று அந்த அமைப்பின் அதிகாரிகள் கூறியுள்ளனர். சப்வே ஒன்றின் அருகில் 20 வயது பெண் தன்னுடைய குழந்தை மற்றும் நண்பருடன் குளிருக்கு நடுங்கிய வண்ணம் இருந்தனர். அவர்களை காவல்துறையினர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

இந்த குளிர் காலத்தினால் சாலை மற்றும் நீர் வழிகளில் ஏரளமான விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. தென்மேற்கு ஜெர்மனி காவல்துறையினர் ”49 வயது நபர் ஒருவர், ட்ராக்டரில் சென்று கொண்டிருந்த போது சறுக்கி வயலில் விழுந்து உயிரிழந்தார்” என்று கூறியுள்ளனர்.

மேற்கு பிரான்சிஸில் உறைபனி மழையால் பெரிய பெரிய சரிவுகளை உருவாக்கியுள்ளது. பெரும்பாலும் கிராமப்புறத்தில் உள்ள நகரங்களையும் கிராமங்களையும் இணைக்கும் சிறிய சாலைகள் பயன்படுத்தக் கூடாது என்று பிரிட்டனில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். பெரிய லாரிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Arctic blast puts europes homeless travellers in peril

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X