Army soldiers protect an elephant in Srilanka: இலங்கையில் கண்டியில் உலகப்புகழ்பெற்ற புத்தர் கோயில் திருவிழா ஊர்வலத்தில் கலந்துகொண்டு புனிதப் பொருட்களை எடுத்துச் செல்லும் நடுங்காமுவா ராஜா என்ற யானைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையி உள்ள கண்டி நகரில் உலகப் புகழ்பெற்ற புத்தர் கோயில் உள்ளது. இங்குதான் புத்தரின் புனிதப் பல்கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 10 நாட்கள் எசல பெரஹெரா திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும். திருவிழாவின் போது புத்தர் கோயிலில் இருந்து கண்டியில் உள்ள மலைக்கு புனிதப் பொருட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். இது எசல ஊர்வலம் என்று அழைக்கப்படும்.
இந்த ஊர்வலம் 90 கி.மீ நடைபெறும். இதில் 100 யானைகள் நடனக் கலைஞர்கள் கலந்துகொள்வார்கள். மேலும், இந்த ஊர்வலத்தில் புத்தர் கோயிலின் புனிதப் பொருட்களை நடுங்காமுவா ராஜா என்ற 65 வயது யானை எடுத்துச் செல்லும். இந்த யானை இலங்கையின் கௌரவமாகக் கருதப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடுங்காமுவா ராஜா யானை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்று மோதிவிட்டது. இதில் யானைக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பின் யானைக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்க இலங்கை அரசு உத்தரவிட்டது.
இலங்கை அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, நடுங்காமுவா ராஜா யானை திருவிழாவில் ஊர்வலமாக செல்லும்போது 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதனால், இந்த யாணை ரணுவத்தால் பாதுகாக்கப்படும் யானை என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
கடந்த மாதம் எசல பெரஹெரா திருவிழாவின் எசல ஊர்வலத்தில் கலந்துகொள்வதாக இருந்த இலங்கையின் 70 வயதான டிக்கிரி யானை உடல் நலக்குறைவு காரணமாக கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த டிக்கிரி யானை நேற்று முன் தினம் முதுமை மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது.