இஸ்ரேல் மீது ஈரான் நேற்று திடீரென சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செவ்வாயன்று இஸ்ரேல் மீது ஈரான் 200க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய தூதரகம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியது. ஈரானின் புரட்சிகர காவலர்கள் கூற்றுப்படி, ஈரான் இஸ்ரேல் மீது பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவியதாக கூறியது. ஈரான் மிகப்பெரிய தவறு செய்து விட்டது. இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதற்கான உத்தரவை அந்நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி விடுத்ததாக ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து கமேனி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.
ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் விமான நிலையங்கள் மூடப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஏவுகணை வீசப்பட்டபோது இஸ்ரேல் முழுவதும் அலாரம் ஒலித்தது மற்றும் ஜெருசலேம் மற்றும் ஜோர்டான் நதி பள்ளத்தாக்கில் இஸ்ரேலியர்கள் வெடிகுண்டு முகாம்களில் குவிக்கப்பட்ட பின்னர் வெடிக்கும் சத்தம் கேட்டது. அரசு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பின் போது நிருபர்கள் தரையில் படுத்துக் கிடந்தனர்.
வாஷிங்டன் டி.சியில் நடந்த கார்னகி நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, இந்தியா அக்டோபர் 7-ஐ "பயங்கரவாத தாக்குதலாக" கருதுவதாகவும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை புரிந்து கொண்டதாகவும் கூறினார்.
"ஆனால், எந்தவொரு நாடும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு சேதம் அல்லது பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.காசாவில் என்ன நடந்தது என்பதைப் பொறுத்தவரை, அங்கு ஒருவித சர்வதேச மனிதாபிமான முயற்சியை மேற்கொள்வது முக்கியம், ”என்று அவர் கூறினார்.
RAW FOOTAGE: Watch as Iranian missiles rain over the Old City in Jerusalem, a holy site for Muslims, Christians and Jews.
— Israel Defense Forces (@IDF) October 1, 2024
This is the target of the Iranian regime: everyone. pic.twitter.com/rIqUZWN3zy
இஸ்ரோல் மீதான ஈரான் தாக்குதலை அடுத்து டெல் அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியது. "இந்த பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய மக்களும் தூதரகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்று கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.