ஸ்பெயினின் இளவரசியாக தனது 12 வயது மகளை, மன்னர் ஆறாம் ஃபிலிப் அறிவித்தார்.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மன்னர் குடும்பத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில், ஸ்பெயின் நாட்டின் மன்னர், ஆறாம் ஃபிலிப், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மன்னர் ஃபிலிப், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பை தெரிவிக்க இருப்பதாக கூறினார்.
அதன் பின்பு, ஸ்பெயின் நாட்டின் வருங்கால இளவரசியாக , 12 வயதாகும் தனது மகள் லியோவை அறிவிப்பதாகக் கூறினார். வருங்காலத்தில் தனது மகள் லியோவை நாட்டை ஆட்சி செய்வதாகவும் மன்னர் ஃபிலிப் தெரிவித்தார். நாட்டையே ஆளும் அரசியாக இளவரசி அறிவிக்கப்படுவது, மன்னர் குடும்பத்தினருக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவமாகும்.
தொடர்ந்து, நடைபெற்ற இந்த விழாவில், மன்னர் ஃபிலிப் தனது மகளுக்கு, கோல்டன் ஃபிளீஸ் விருதையும் வழங்கி சிறப்பித்தார்.கோல்டன் ஃபிளீஸ் விருது, ஸ்பெயின் நாட்டின் உயரிய விருதாகும். வருங்காலத்தில் நாட்டை ஆளப்போகும், இளவரசிக்கு கோல்டன் ஃபிளீஸ் விருது வழங்கப்படுவது, நாட்யை ஆளுவதற்கான முழு பொறுப்பையும் இளவரசிக்கு அளிப்பதாக அர்த்தம்.
அதன் பின்பு, இளவரசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, லியோவிற்கு நாட்டு மக்கள், அரச குலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஆகியோர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.