அட, இங்க பார்றா… ரஜினி ரசிகையை நிச்சயம் செய்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்ட கிளென் மேக்ஸ்வெல் தனது நீண்ட நாள் காதலி வினி ராமன் என்ற இந்திய வம்சாவழிப் பெண்ணுடன் நடந்த நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளார். வினி ராமன் ஒருமுறை தனக்குப் பிடித்த ரஜினியின் படையப்பா படத்தை மெக்ஸ்வெல்லைப் பார்க்க வைப்பார் என்று கூறியிருந்தார்.

glenn maxwell, glenn maxwell girlfriend vini raman, கிளேன் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவழிப் பெண்ணை நிச்சயம் செய்த கிளேன் மேக்ஸ்வெல், glenn maxwell - vini raman, glenn maxwell fiancee, வினி ராமன், vini raman,indian origin girl, ரஜினிகாந்த், படையப்பா, glenn maxwell wedding,rajinikanth padayappa, vini raman favourite tamil movie, maxwell mental health break
glenn maxwell, glenn maxwell girlfriend vini raman, கிளேன் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவழிப் பெண்ணை நிச்சயம் செய்த கிளேன் மேக்ஸ்வெல், glenn maxwell – vini raman, glenn maxwell fiancee, வினி ராமன், vini raman,indian origin girl, ரஜினிகாந்த், படையப்பா, glenn maxwell wedding,rajinikanth padayappa, vini raman favourite tamil movie, maxwell mental health break

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்ட கிளென் மேக்ஸ்வெல் தனது நீண்ட நாள் காதலி வினி ராமன் என்ற இந்திய வம்சாவழிப் பெண்ணுடன் நடந்த நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளார். வினி ராமன் ஒருமுறை தனக்குப் பிடித்த ரஜினியின் படையப்பா படத்தை மெக்ஸ்வெல்லைப் பார்க்க வைப்பார் என்று கூறியிருந்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். இவர் இந்திய வம்சாவழிப் பெண் ஒருவருடன் நட்பில் இருப்பதாக பேசப்பட்டு வந்ததது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய வம்சாவழிப் பெண் வினி ராமன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

கிளென் மேக்ஸ்வெல் மெல்போர்னைச் சேர்ந்த மருந்தியல் நிபுனர் வினி ராமன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் வினி ராமன் தனது கைகளில் நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டுகிறார். வினி ராமனும் இதே படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ளார். அதில், “கடந்த வாரம், எனக்குப் பிடித்த நபர் அவரை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டார். யேஸ்” என்று தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

????

A post shared by Glenn Maxwell (@gmaxi_32) on


இவர்கள் இருவரும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் சந்தித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்ததாகவும், சில காலமாக ஒருவருக்கொருவர் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

வினி ராமன், தென்னிந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்றாலும், மெல்போர்னில் பிறந்து வளர்ந்தவர். சுவாரஸ்யமாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் இன்ஸ்டாகிராமில் தனது ஃபாலோவர்களிடம் ஒரு கேள்வி பதில் அமர்வில், ​​ஒருவர் அவரிடம் பிடித்த தமிழ் படம் எது என்று கேட்டார். அதற்கு அவர் ‘படையப்பா’ என்று கூறினார். மேலும், சூப்பர் ஸ்டார் ராஜின்காந்த் – நடித்த அந்தப் படத்தின் ஆங்கில சப்டைட்டில் உடன் நல்ல தரமான டிவிடி கிடைத்தவுடன், அதை மேக்ஸ்வெல்லை பார்க்க வைப்பார் என்றும் கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கிளேன் மேக்ஸ்வெல் தற்போது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணிக்கு வெளியே உள்ளார்.

மேக்ஸ்வெல் இலங்கைக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் டி 20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பின்னர், தனது மன நலத்தை சரிசெய்வதற்காக போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் விலகினார். உண்மையில், வினி ராமன் தான் தனது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்து, தொழில்முறை உதவியை நாடுமாறு அறிவுறுத்தினார் என்று அவர் கூறியிருந்தார்.


மேக்ஸ்வெல் கடந்த ஆண்டு டிசம்பரில் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார். மேலும், மெல்போர்ன் நட்சத்திரங்கள் பிக் பாஷ் லீக் 2019-20 இறுதிப் போட்டிக்கு வர உதவியது.

கிளேன் மெக்ஸ்வெல் ஐபிஎல் ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு வாங்கிய நிலையில், அவர் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடுவார்.

இந்தியப் பெண்ணை மணந்த முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் அல்ல. இதற்கு முன்பு ஆஸ்திரேலிய முன்னாள் பந்து வீச்சாளர் ஷான் டைட், மாடல் மஷூம் சிங்காவை ஐ.பி.எல் விருந்தில் சந்தித்து ஒரு வருடம் டேட்டிங் செய்த பின்னர் 2014 இல் திருமணம் செய்து கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Australia cricket player glenn maxwell engagement with indian origin girl rajinikanth

Next Story
சீனாவுடன் தொடர்பில் இல்லாத நாடுகளிலும் பரவும் கொரொனா வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கவலைHealth officials worry coronavirus untraceable clusters emerge
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com