பள்ளியில் விழுந்த விமானம்: 19 பேர் பலி- வங்கதேசத்தில் சோகம்

வங்கதேச தலைநகர் டாக்காவில், வங்கதேச விமானப்படையின் பயிற்சி ஜெட் விமானம் ஒன்று பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவில், வங்கதேச விமானப்படையின் பயிற்சி ஜெட் விமானம் ஒன்று பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

author-image
WebDesk
New Update
Bangladesh Air Force training jet crashes

Bangladesh Air Force training jet crashes

வங்கதேச தலைநகர் டாக்காவில், வங்கதேச விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் திங்கள்கிழமை நிகழ்ந்தது.
 
வங்கதேச ராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம், விபத்துக்குள்ளான F-7 BGI ரக விமானம் விமானப்படையைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் வடக்கு உத்தாரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரியில் குழந்தைகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

விபத்து மற்றும் மீட்புப் பணிகள்

விபத்து நடந்த இடத்திலிருந்து 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை மற்றும் சிவில் பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் முஹம்மது ஜாஹெட் கமல் தெரிவித்துள்ளார் என தி டாக்கா டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

காயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட, தேசிய தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு, 10 முதல் 15 நோயாளிகளை மட்டுமே அனுமதிக்கும் அளவுக்கு இடவசதி உள்ள நிலையில், மருத்துவமனை நிரம்பி வழிகிறது என வங்கதேச தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸின் சிறப்பு உதவியாளர் டாக்டர் சயீதூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

அரசின் இரங்கல் மற்றும் துக்கம்

இந்த சம்பவத்திற்கு தலைமை ஆலோசகர் யூனுஸ் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது "நாட்டுக்கு ஆழ்ந்த துயரமான தருணம்" என்று அவர் விவரித்தார்.

"அம்பாஸில் இன்று வங்கதேச விமானப்படையின் F-7BGI பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான கோர சம்பவத்தால் நான் ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் விமானப்படைக்கும், மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஏற்பட்ட இழப்பு ஈடு செய்ய முடியாதது" என்று அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இந்த துயர சம்பவத்தை அடுத்து, செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தலைமை ஆலோசகரின் பத்திரிகை பிரிவு அறிவித்துள்ளது. அன்று அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கதேச தூதரகங்களில் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தி டாக்கா டிரிப்யூன் தெரிவித்துள்ளது.


இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். 

 

webdesk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: