Advertisment

வங்கதேச தேர்தல் மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் ஷேக் ஹசினா...

300 தொகுதிகளில் 287 தொகுதிகளை ஷேக் ஹசினாவின் கூட்டணி வென்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bangladesh elections 2018, Sheik Hasina

Bangladesh elections 2018

Bangladesh elections 2018 : வங்கதேசத்தில் மூன்றாவது முறையாகவும் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதாக இன்று காலை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 300 தொகுதிகளை கொண்ட வங்கதேச பாராளுமன்றத்தில், 287 தொகுதிகளை ஷேக் ஹசினாவின் கட்சி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

பங்களாதேஷ் நேசனிலிஸ்ட் பார்ட்டி எனப்படும் பிரதான எதிர்க்கட்சி, 2014ம் ஆண்டு தேர்தலை புறக்கணித்தது. ஆனால் இம்முறை அவர்களால் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Bangladesh elections 2018 - அரியணை ஏறும் ஷேக் ஹசினா

பத்து வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் ஷேக் ஹசினா, அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் அவர் மீது மனித உரிமை மீறல்கள், ஊடகங்களுடனான பிரச்சனைகள் குறித்த அதிருப்திகளும் நிலவி வருகிறது.

வங்க தேசத்தில் அதிக அளவில் இயங்கி வரும் ஜவுளித்துறை ஊழியர்களுக்கு சம்பளத்தொகையை அதிகரித்து தர இருப்பதே, அவரின் முதல் ஆணையாக இருக்கலாம் என்று அவருடைய கட்சித் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். இன்று பிற்பகல் ஊடகவியலாளர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேச இருக்கிறார்.

பிரதான எதிர்க்கட்சித் தலைவரான கமல் ஹோசைன் இது குறித்து கூறுகையில் தேர்தலில் ஏதோ தவறு நடந்துள்ளது. தேர்தல் ஆணையம் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

இது தொடர்பான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க 

வாக்களிக்கும் எந்திரத்தில் கோளாறு - எதிர்க்கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு

தேர்தல் நடத்தப்பட்ட சமயத்தில் சுமார் 17 நபர்கள் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர். 82 வயதான கமல் ஹொசைன் “நடத்தப்பட்ட தேர்தல் முழுக்க முழுக்க சட்டத்திற்கு புறம்பாகவும், எதிராகவும் நடைபெற்றுள்ளது. என் வாழ்வின் நான் எத்தனையோ மோசமான தேர்தலை பார்த்துள்ளேன். ஆனால் இது போன்ற ஒரு தேர்தலை நான் சந்தித்ததே இல்லை” என்று வங்கதேச தலைநகரில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.

165 மில்லியன் மக்களை கொண்டுள்ள இந்நாட்டில் தற்போது நடத்தப்பட்ட தேர்தல் தொடர்பாகவும், எதிர்கட்சிகள் முன் வைக்கும் “வாக்களுக்கும் எந்திரக் கோளாறு” தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

தெற்காசியாவின் மனித உரிமைகளை கண்காணித்து வரும் மீனாட்சி கங்குலி “வாக்களர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கிறது, தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது, எதிர்க்கட்சியினர் மற்றும் வாக்களர்களில் சிலர் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டு வருகின்றார்கள். இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment