பங்களாதேஷ் பாராளுமன்றம் செவ்வாய்கிழமை கலைக்கப்பட்டதாக பாராளுமன்ற அலுவலகம் அறிவித்துள்ளதாக செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் போராடியவர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர் போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கினர். பிரதம மந்திரி ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யக் கோரி அவர்கள் நடத்திய போராட்டங்கள் வன்முறையாக மாறியது, ஞாயிற்றுக்கிழமை 100 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். வன்முறை தீவிரமடைந்ததையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட நாட்டில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் முயற்சிகள் மேற்கொண்டாலும், உள்ளூர் ஊடகங்களின்படி, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் 100 இறப்புகளுடன் வங்கதேசத்தில் செவ்வாய்க்கிழமை இறந்தவர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்தது.
செவ்வாயன்று இயல்பு நிலை திரும்புவதற்கான அறிகுறிகள் தென்பட்டன, போலீஸ் மற்றும் இராணுவம் தெருக்களில் ரோந்து சென்றது, என BDNews24.com செய்தி கூறுகிறது, மேலும் சர்ச்சைக்குரிய வேலை ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக பள்ளிகள் நீண்ட காலத்திற்கு மூடப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டன.
இதற்கிடையில் புதிய இடைக்கால அரசை விரைவில் அமைக்க வலியுறுத்தி, இன்று மாலை 3 மணிக்குள் கலைக்க வேண்டும் என்று மாணவர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர். "கடுமையான திட்டம்" பற்றி எச்சரித்து, "புரட்சிகர மாணவர்களை தயாராக இருக்கும்படி" அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்தநிலையில், வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வெளியிட்ட பேஸ்புக் வீடியோவில், தலைவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க, விரைவில் அமைக்கப்படும் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை ஆலோசகராக இருக்க ஒப்புக்கொண்டார். பங்களாதேஷ் இராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை இன்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“