Advertisment

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; வங்க தேசத்தில் வெடித்தது மக்கள் போராட்டம்

வங்க தேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு; குறைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

author-image
WebDesk
New Update
பெட்ரோல், டீசல் விலை உயர்வு; வங்க தேசத்தில் வெடித்தது மக்கள் போராட்டம்

Fuel price hike triggers protests in Bangladesh; ‘highest such increase in country’s history’: வங்கதேச தலைநகர் டாக்காவில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட பொது மக்கள் எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக போராட்டங்களைத் தொடங்கியுள்ளதால், போராட்ட அலைகள் காணப்படுகின்றன.

Advertisment

பிரதமர் மற்றும் அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம், ஆகஸ்ட் 5 அன்று, டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை முறையே 42.5 சதவீதமும், பெட்ரோல் மற்றும் ஆக்டேன் ஆகியவற்றின் விலையை முறையே 51.1 சதவீதமும் மற்றும் 51.7 சதவீதமும் உயர்த்தியது. இந்த எரிபொருள் விலை உயர்வு பொது போக்குவரத்து கட்டண உயர்வுக்கு வழிவகுத்தது.

இதையும் படியுங்கள்: விலங்குகளுக்காக உயிரை பயணம் வைக்கும் உக்ரைன் பெண்… உலகச் செய்திகள் சில

வங்கதேச செய்தித்தாள் தி டெய்லி ஸ்டார் ஒரு தலையங்கத்தில், இந்த விலை உயர்வு "நாட்டின் வரலாற்றில் மிக உயர்ந்த அதிகரிப்பு" என்று கூறியது. மேலும், நாட்டில் உள்ள மக்கள் ஏற்கனவே "விண்ணைத் தொடும் உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் ஏராளமாகப் பெருகும் பணவீக்கம்" ஆகியவற்றை அனுபவித்து வருகின்றனர், இந்த நடவடிக்கை அவர்களின் கஷ்டத்தை மேலும் அதிகரிக்கும் என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

48 மணி நேரத்திற்குள் எரிபொருள் விலையை முந்தைய விலைக்குக் குறைக்க வேண்டும், போக்குவரத்துக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், பொதுப் போக்குவரத்தில் மாணவர்களுக்கு பாதிக் கட்டணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று யுனைடெட் நியூஸ் ஆஃப் பங்களாதேஷ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“பொது போக்குவரத்து துறையில் கட்டணம் என்ற பெயரில் அராஜகம் நடக்கிறது. அது நிறுத்தப்பட வேண்டும். போக்குவரத்து உரிமையாளர்களால் ஏற்படுத்தப்பட்ட தாங்க முடியாத நிலை காரணமாக பயணிகள் முன்பு நிர்ணயித்த கட்டணத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது, ”என்று ஏழு கல்லூரி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இஸ்மாயில் சாம்ராட் கூறினார்.

இதற்கிடையில், டாக்கா ட்ரிப்யூன் படி, எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், எம்.டி யூனுஸ் அலி அகோன்ட், திங்களன்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எரிபொருள் விலை உயர்வு தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எந்தவொரு பொது விசாரணையும் நடத்தாமல், மக்களின் கருத்துக்களைப் பெறாமல் எரிபொருள் பொருட்களின் விலையை அரசாங்கம் "நியாயமற்ற முறையில்" உயர்த்தியுள்ளது, இது சட்டம் மற்றும் அரசியலமைப்பை மீறுவதாகும் என்று வழக்கறிஞர் கூறினார். வங்காளதேச எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் சட்டம், 2003ன் கீழ் வெகுஜன விசாரணைகளை நடத்தி மக்களிடம் கருத்துகளை கேட்டு பெட்ரோலியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதை வங்காளதேச எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் (BERC) மட்டுமே செய்ய முடியும் என்றும், அதைச் செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் வழக்கறிஞர் கூறினார்.

கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சியின் தலைவரான ரஷேத் கான் மேனன், இது அரசாங்கத்தின் "விரக்தியான முடிவு" என்று டெய்லி ஸ்டார் செய்தி நிறுவனத்திடம் கூறினார். மேலும், "அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், நிதி ரீதியாகவும், இது மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்றும் அவர் கூறினார். ஆளும் அவாமி லீக் தலைமையிலான 14 கட்சி கூட்டணியில் ரஷேத் கான் மேனன் முக்கிய தலைவராக உள்ளார்.

பங்களாதேஷ் தற்போது பொருளாதார நிச்சயமற்ற நிலையில் தத்தளிக்கிறது, ஜூலை 24 அன்று அதன் தற்போதைய நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) முறையாக $4.5 பில்லியன் கடனைக் கோரியது. ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட பணவீக்க அதிகரிப்பு காரணமாக, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

தி டெய்லி ஸ்டார் அதன் தலையங்கத்தில், விலை உயர்வுக்கு அரசாங்கத்தால் கூறப்படும் அதிகாரப்பூர்வ காரணம் "விலை சரிசெய்தல்" ஆகும், இது "நிர்பந்திக்கப்பட்டது" ஏனெனில் சர்வதேச அளவில் எரிபொருள் விலை பங்களாதேஷை விட அதிகமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை IMF கடனின் ஒரு முக்கிய நிபந்தனையை நிறைவேற்ற உதவும் என்று கூறப்படுவது ஒரு அதிகாரப்பூர்வமற்ற காரணம், இது "வெளிப்படையாக மற்ற நிபந்தனைகளுடன், எரிசக்தி துறையில் இருந்து மானியங்களை திரும்பப் பெறுவது" ஆகும்.

தெற்காசியாவில், ஏழு தசாப்தங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கையும் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்புக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. இலங்கை இறக்குமதி செய்ய வெளிநாட்டு நாணயம் இல்லாமல் போனது, மிக முக்கியமான அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்கவில்லை, பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள், உணவு பற்றாக்குறை மற்றும் நீண்ட மின்வெட்டு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் இல்லத்தை இலக்கு வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராடியதால், அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

அந்நியச் செலாவணி கையிருப்பு விரைவாகக் குறைந்து வரும் பாகிஸ்தான், இந்த மாத தொடக்கத்தில் IMF உடன் ஒரு உடன்பாட்டை எட்டியது, இது 1.2 பில்லியன் டாலர் கடன்களை விடுவிக்கவும் மேலும் நிதியைத் திறக்கவும் வழி வகுக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment