/indian-express-tamil/media/media_files/wnfxpBcqfAsqryqUEGU8.jpg)
வங்கதேசத்தில் 30 சதவீத இடஒதுக்கீடு முறை அந்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியது.
வங்கதேச நாட்டின் உச்ச நீதிமன்றம், அரசாங்க வேலைகளுக்கான ஒதுக்கீட்டு முறையை மீண்டும் குறைத்துள்ளது. அந்நாட்டின் அரசு வேலைகளில் 93% தகுதி அடிப்படையிலான முறையில் ஒதுக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக 30 சதவீத இடஒதுக்கீடு முறை அந்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அதன்பின் நடந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதாவது, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் 93% அரசாங்க வேலைகளை தகுதி அடிப்படையிலான முறையில் ஒதுக்க உத்தரவிட்டது, மீதமுள்ள 7% 1971 இல் வங்கதேசத்தின் சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் உறவினர்கள் மற்றும் பிற பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டது.
மேலும், “உச்ச நீதிமன்றம், 1971 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்காக போரில் ஈடுபட்ட வீரர்களின் உறவினர்களுக்கு 30% பதவிகளை ஒதுக்கிய வேலை ஒதுக்கீட்டை குறைத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Bangladesh Protests Live Updates: Top court scraps most govt job quotas that sparked violent protests
இது குறித்து, அட்டர்னி ஜெனரல் ஏ.எம் அமீன் உதின், “சிவில் சர்வீஸ் வேலைகளில் 5 சதவீதம் சுதந்திரப் போர் வீரர்களின் குழந்தைகளுக்கும், இரண்டு சதவீதம் மற்ற பிரிவினருக்கும் ஒதுக்கப்படும்” என்று கூறினார்.
இதற்கிடையில் வங்கதேசத்தில் சிக்கியுள்ள தங்களது நாட்டினரை மீட்கும் முயற்சியில் மற்ற நாடுகள் இறங்கியுள்ளன.
தமிழ்நாட்டை சேரந்தவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. இதற்கிடையில், வங்கதேசத்தில் சுமார் 3,000 இலங்கையர்கள் சேவையாற்றுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.