BBC weatherman Owain Wyn Evans drumming BBC theme music : கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றதால் மக்கள் யாவரும் வெளியே செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. காவல்துறையினர், மருத்துவப் பிரிவினர் மட்டுமின்றி ஊடகத்துறையினரும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகளை தருவதற்காக 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க : வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர இயலாது – மத்திய அரசு ஐகோர்ட்டில் பதில்
பொது போக்குவரத்து மற்றும் கூட்டம் கூடுதல் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் பலரும் தங்களின் வீடுகளில் இருந்து செய்திகளை தரும் நிலையும் ஆங்காங்கே உருவாகியுள்ளது. பி.பி.சியின் வானிலை அறிக்கை அறிவிக்கும் செய்தி வர்ணனையாளர் ஒவைன் வெய்ன் ஈவான்ஸ் (Owain Wyn Evans), செய்தியை வாசித்து முடித்த கையோடு, ஃபினிஷிங் டச் தரும் பி.பி.சி.யின் தீம் மியூசிக்கையும் வீட்டில் இருந்தே தன்னுடைய இசைக் கருவிகள் கொண்டு இசைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பதிவு செய்து, அவர்கள் என்னை வொர்க் ஃப்ரம் ஹோம் பார்க்க சொன்னார்கள். ஆனால் தீம் மியூசிக்கையும் நானே இசைக்க வேண்டும் என்று நினைத்தும் பார்க்கவில்லை என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் ஓவைன். கொரோனா வைரஸ் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அனைத்து திறமைகளையும் வெளிகாட்ட உதவியுள்ளது என்றால் நிச்சயமாக மிகை அற்ற ஒன்று தான்.
மேலும் படிக்க :100-வது பிறந்த நாள் : மருத்துவ ஊழியர்களுக்காக 100 அடி ”வாக்கிங்”… ரூ. 100 கோடி நிதி உதவி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”