இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு "மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும்" வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆர். பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே. பேரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் பொதுச்செயலாளர் ஹான்ஸ் எலெக்ரென் புதன்கிழமை ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் வெற்றியாளர்களை அறிவித்தார்.
இதையும் படியுங்கள்: ஸ்வீடனின் ஸ்வாண்டே பாபோவுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
நோபல் பரிசு அறிவிப்புகள் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது, நியாண்டர்டால் டி.என்.ஏ.,வின் ரகசியங்களை கண்டுபிடித்த விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. சிறிய துகள்கள் பிரிக்கப்பட்டாலும் ஒன்றோடொன்று தொடர்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதைக் காட்டியதற்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு செவ்வாய்க்கிழமை இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதன்கிழமை வேதியியலுக்கான வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வியாழன் இலக்கியத்திற்கான வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்திற்கான பரிசு அக்டோபர் 10ஆம் தேதியும் அறிவிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil