தடுப்பூசி செலுத்த மறுக்கும் ராணுவ வீரர்கள்:
அமெரிக்கா எடுத்த நடவடிக்கை
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்கா மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்தது. அந்நாட்டில் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
வல்லரசு நாடாக இருந்தாலும் இந்தக் கொடிய வைரஸால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது அமெரிக்கா. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும் அமெரிக்காவில் பொதுமக்களில் ஒருசாரர் அச்சம் மற்றும் சந்தேகம் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவதில்லை.
மக்கள் இப்படியிருந்தால் அந்நாட்டின் ராணுவ வீரர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்த ராணுவ வீரர்கள் மறுத்தால் வெளியேற்றப்படுவார்கள் என்று ராணுவ அமைச்சர் கிறிஸ்டின் வோர்முத் உத்தரவு பிறப்பித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை மறுக்கும் வீரர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை நாங்கள் தொடங்குவோம். தடுப்பூசி போடாமல் இருக்கும் வீரர்கள் மற்ற ராணுவ படைக்கு ஆபத்தாக இருக்கின்றனர். 3,000 க்கும் அதிகமான வீரர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 இறுதி நிலவரப்படி 4,82,000 வீரர்கள் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
முன்னதாக, தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்த 6 ராணுவ உயரதிகாரிகள் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நீக்கப்பட்டனர்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்த சுமார் 3,073 வீரர்களுக்கு கடிதம் மூலமாகவும் கடும் கண்டனத்தை ராணுவ தலைமை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்தால் படையிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்று அமெரிக்க கடற்படையும் அறிவித்தது.
தனிப்படுத்தல் கட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த நாடு…
கொரோனாவை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டை இந்த மாதத்துடன் முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக நியூஸிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இருந்த கட்டுப்பாட்டை இந்த மாதத்துடன் நீக்க முடிவு செய்யப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள நியூஸிலாந்தைச் சேர்ந்தவர்களும் நாடு திரும்பிய பிறகு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொடங்கிய பிறகு, நியூஸிலாந்து மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கட்டாயம் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு அமலில் இருக்கிறது.
பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற
வடகொரியா அதிபரின் மனைவி
அமெரிக்காவை தொடர்ந்து சீண்டி வரும் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் மனைவி ரி சோல் ஜு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
லூனார் புத்தாண்டு விழாவையொட்டி, தலைநகர் பியாங்யங்கில் கலை அரங்கம் ஒன்றில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியைக் காண ரி சோல் ஜு வந்திருந்தார்.
அவர் பொதுவாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. எனவே, இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
கிம்மும் அவரது மனைவியும் அரங்கத்துக்குச் சென்று கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிரபல ஊடக நிறுவனத்தின் தலைவர் ராஜிநாமா
பாலியல் சம்பந்தப்பட்ட புகாரில் சிக்கிய பிரபல ஊடக நிறுவனமான சிஎன்என் தலைவர் ஜெஃப் ஜுக்கர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வார்னர் மீடியா நியூஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.
சிஎன்என் ஊடக நிறுவனத்தில் கடந்த 2013-இல் இருந்து தலைவராக இருந்து வந்தார்.
செயல்களுக்கு துருக்கி மையமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் எல்லையில் பதற்றம்:
ஐரோப்பாவுக்கு படைகளை அனுப்பி வரும் அமெரிக்கா
உக்ரைன் எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருவதால், ஐரோப்பாவுக்கு அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் அமெரிக்கா அனுப்பி வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி கூறியதாவது:
வடக்கு கரோலினாவின் ஃபோர்ட் பிராக்கில் இருந்து சுமார் 2,000 படைகளை போலாந்து மற்றும் ஜெர்மனிக்கு இந்த வாரம் அனுப்ப அதிபர் பைடன் முடிவு செய்துள்ளார்.
முன்னதாக, ரஷிய படைகளுடன் சண்டையிட ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பவில்லை. எனினும், தற்காத்துக் கொள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புகிறோம் என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்திருந்தார்.
சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷியா வசம் இருந்த உக்ரைன் தனி நாடாக பிரிந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்ப பகுதி ரஷியாவுடன் இணைந்தது. அதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படத் தொடங்கியது.
ரஷியா பெரியதொரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. அதைத் தொடர்ந்து பரம எதிரியான ரஷியா சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.