மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரருமான பில் கேட்ஸ், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத திரவ ஹைட்ரஜனால் இயங்கும் ஒரு எதிர்கால சூப்பர் கப்பலை ரூ.4,600 கோடிக்கு வாங்கியுள்ளார்.
இந்த கப்பல், ஹைட்ரஜன் திரவ எரிபொருளைப் பயன்படுத்துவதால், புகையை வெளியிடாமல் அதற்கு பதிலாக தண்ணீரை மட்டும் உமிழும். பில் கேட்ஸ் வாங்கியுள்ள இந்த சூப்பர் கப்பலின் விலை ரூ.4,600 கோடி என்று செய்தி வெளியாகியுள்ளது.
பொதுவாக பில் கேட்ஸ் ஒரு சூப்பர்யாட்ச் ஹாலிடேமேக்கர். ஆனால், அவர் இதற்கு முன்பு இதுபோன்ற கப்பலை சொந்தமாக வைத்திருக்கவில்லை. ஆனால், இப்போது இந்த கப்பலை அவரது கோடை பயணங்களில் வாடகைக்கு விட விரும்புகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த மொனாக்கோ படகு கண்காட்சியில் சூப்பர்யாட்ச் கப்பலை வாங்கும் திட்டங்கள் வெளியிடப்பட்டன. குறிப்பாக, இது திரவ ஹைட்ரஜனால் இயக்கப்படும் முதல் வகை கப்பல்.
இந்த சொகுசு லைனர் கப்பல் 370 அடி நீளமுடையது. 14 விருந்தினர்கள், 31 குழு உறுப்பினர்கள், ஒரு உடற்பயிற்சி நிலையம், யோகா ஸ்டுடியோ, அழகு நிலைய அறை, மசாஜ் பார்லர் மற்றும் அதன் பின்புற டெக்கில் குளம் ஆகியவற்றுடன் ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.
எரிபொருள் கலங்களுக்கு மின் ஆற்றலை வழங்கும் திரவ ஹைட்ரஜனால் இந்த சொகுசு கப்பல் இயங்கும் என சினோட் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் பில்கேட்ஸ் வாங்கியுள்ள சொகுசு கப்பல் பற்றி கூறியுள்ள சினோட், தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் அழகியல் சார்ந்தும் இந்த சொகுசு கப்பலை வடிவமைத்து வருகிறோம். தவிர முழுமையாக செயல்படும் திரவ ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் கலங்களை செயல்படுத்துவதும் கூட எங்களுக்கு சவாலாக இருக்கும் என கூறியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"