Advertisment

இன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி... பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு

இந்த ஆண்டின் இறுதிக்குள் 10 லட்சம் தடுப்பூசிகளை தயாரிக்கவும் தயாராகி வருகிறது இந்த அறக்கட்டளை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிந்த சீனா! ரேபிட் கிட்கள் போல் கோளாறு இல்லாமல் இருக்குமா?

Bill gates foundation tests IN0 4800 coronavirus vaccine today : உலகம் முழுவதும் கொரோனா நோய் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சவாலை சமாளிக்க மாபெரும் போராட்டத்தையே ஆய்வகங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் பில்கேட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு  IN0 - 4800 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கான ஆராய்ச்சியில் முக்கிய நிலையை இன்று அடைந்துள்ளது பில்கேட்ஸ் அறக்கட்டளை.  கொரோனா தடுப்பூசியை இன்று சோதனை செய்ய உள்ளது அந்நிறுவனம். இந்த சோதனையின் முடிவுகள் வெளியாக கொஞ்சம் காலம் ஆகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

உலக அளவில் இந்த நோய்க்கு இதுவரையில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இத்தாலியில் 16 ஆயிரத்து 523 நபர்கள் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின்ல் 13,169 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 10 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை. பில்கேட்ஸ் அறக்கட்டளை இந்த சோதனையில் வெற்றி பெற்றால் மனித குலத்தை காப்பற்றியதின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Bill gates foundation tests IN0 4800 coronavirus vaccine today

இந்த சோதனை முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள 40 பேர் முன்வந்துள்ளனர். இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், இந்த தடுப்பூசிகளை உலக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைக்க உள்ளது பில்கேட்ஸ் அறக்கட்டளை. இந்த ஆண்டின் இறுதிக்குள் 10 லட்சம் தடுப்பூசிகளை தயாரிக்கவும் தயாராகி வருகிறது இந்த அறக்கட்டளை. 4 வார இடைவெளிக்குள் சோதனைக்காக முன் வந்தவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும்.

மேலும் படிக்க : இந்தியா சரியான நேரத்தில் சிறப்பான முடிவை எடுத்துள்ளது – வாழ்த்திய WHO!

Coronavirus Bill Gates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment