இறந்த தாயை ‘மம்மி’யாக்கி 30 ஆண்டுகள் வாழ்ந்த 70 வயது மூதாட்டி

உக்ரைனில் 70 வயது மூதாட்டி ஒருவர் இறந்த தன் தாயுடன் சுமார் 30 ஆண்டுகள் வாழ்ந்தத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் 70 வயது மூதாட்டி ஒருவர் இறந்த தன் தாயுடன் சுமார் 30 ஆண்டுகள் வாழ்ந்தத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் மைகோலைவ் எனும் நகரத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, இறந்த அந்த மூதாட்டியின் தாயார் உடல் சோபாவில் கிடத்தப்பட்டிருந்தது. வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டு, தலை மூடப்பட்டிருந்தது. நீல நிற ஷூ, பச்சை நிற சாக்ஸ் அணிவிக்கப்பட்டிருந்தது.

தன் தாயாரின் உய்டலுடன் அந்த 70 வயது மூதாட்டி 30 ஆண்டுகளாக வாழ்ந்துவந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு இரு கால்களும் செயல்படவில்லை. இதனால், உதவி ஒன்று தேவைப்பட்டபோதுதான் இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். அந்த வீட்டில், தண்ணீர், கேஸ், மின்சாரம் என எந்த அடிப்படை தேவைகளும் இல்லை. போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, அந்த மூதாட்டி குப்பைகளுக்கு நடுவே அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த மூதாட்டி அக்கம்பக்கத்தினருடன் பேச மாட்டார் என கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த மூதாட்டி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bizarre ukrainian woman found living with mummified mother for more than 30 years

Next Story
மே 13-ஆம் தேதி 3-ஆம் உலகப் போர்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com