ஸ்காட்லேண்டில் உள்ள எடின்பரோவில் நடந்த ஏலத்தில் 1926ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பழமையான விஸ்கி 1.1. மில்லியன் விலக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஸ்காட்லேண்டு நாட்டில் எடின்பரோ என்ற நகரில் ஏலம் ஒன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில், உலகின் பழமை வாய்ந்த பல பொருட்கள் ஏலத்தில் விற்கப்பட்டது. அவற்றை பலரும் அதிக விலை கொடுத்து பெற்றுச் சென்றனர்.
அந்த ஏலத்தில் உலகின் மிகவும் பழமை வாய்ந்த விஸ்கி மதுபாட்டில் ஏலமிடப்பட்டது. 60 ஆண்டுகள் பழமையான இந்த மதுபான பாட்டில், இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு விலை போனது.
இதன் உலகின் மிகவும் அதிக விலைக்கு விற்பனையான விஸ்கியென்ற சாதனையும் படைத்துள்ளது. 1926ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விஸ்கி 1986ஆம் ஆண்டு பாட்டிலில் நிரப்பப்பட்டது. அதன் பாட்டிலில் அழகிய கலை வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
மக்கல்லன் வலேரியோ அதாமி என்ற பெயர் கொண்ட இந்த விஸ்கியை ஹோலி கிரெயில் என்று குறிப்பிடுகிறார்கள்.