குறையொன்றுமில்லை கண்ணா... இளவரசர் ஹாரி- மேகனை அழ வைத்த சிறுவன்!

மேகன் மார்க்கில் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் உலா வந்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இருவரும் 5 வயது சிறுவனை வாஞ்சையோடு கொஞ்சிய காட்சி

பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் மார்கில்லை 5 வயது சிறுவன் நெகிழ வைத்த காட்சிகள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இளவரசர் ஹாரி – மேகன்:

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரி, அமெரிக்க டெலிவிஷன் நடிகை மேகன் மார்கிலுக்கும் கடந்த மே மாத திருமணம் செய்துக் கொண்டார். ஹாரியும் மேகனும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

பின்பு, ராணி இரண்டாம் எலிசபெத் இவர்களின் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது. அதன் பின்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இவர்களது திருமணம் நடைப்பெற்றது.

இளவரசர் ஹாரி – மேகன் மார்கில்லின் ஜோடியை கண்டு கண்ணு வைக்காத லண்டன் மக்களே இருக்கமாட்டார்கள். காதல் மழையில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட தருணங்கள், முத்த மழை போன்ற புகைப்படங்கள் லண்டனை தாண்டிய இந்திய ஊடகங்களிலும் அதிகளவில் பேசப்பட்டன.

திருமணத்திற்கு பிறகு லண்டன் ஊடகங்கள் மட்டுமில்லை இந்திய ஊடகங்களும் இந்த ஜோடி மீது தங்களின் கேமராவை வைத்துள்ளனர். அவர்கள் என்ன செய்தாலும் உடனே வீடியோவாகவும், ஃபோட்டோவாகவும் சமூகவலைத்தளங்களில் பரவ தொடங்கி விடுகிறது.

சமீபத்தில் இளவரசர் ஹாரி, தனது மனைவிக்கு பயந்து சமோசாவை மறைத்து வைத்து சென்ற காட்சிகள் அதிக மக்களால் ரசிக்கப்பட்டது. இப்போது வெளிவந்திருக்கும் மற்றொரு வீடியோ அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ஹாரி மற்றும் மேகன் இருவரும் பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக வெளியே சென்றிருந்தனர்.

சிறுவன் வீடியோ:

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கிலை குழந்தைகள் பூங்கோத்து கொடுத்து வரவேற்றன. அப்போது டவுன் சிண்ட்ரோம் குறைபாடுடைய சிறுவன ஹாரியின் முகத்தை உற்று உற்று பார்த்து தழுவினான். ஹாரி அந்த சிறுவனை வாஞ்சையோடு கட்டியணைக்க முயல், உடனே அந்த சிறுவன் மேகன் மார்கிலை பார்த்து ஓடினான்.

அவரிடம் கையிலிருந்த பூங்கோத்தை கொடுத்து கட்டியணைத்தான். பின்பு இவரின் தலையிலும் கைவைத்து முடியை கோய்து விட்டான். இதனால் நெகிழ்ச்சி அடைந்த இருவரும் சந்தோஷத்தில் கண்கலங்கின.

மேகன் மார்க்கில் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் உலா வந்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இருவரும் 5 வயது சிறுவனை வாஞ்சையோடு கொஞ்சிய காட்சி மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close