பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் இருந்து வியோபாஸ் 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வின்ஹெடோ நகருக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது, விமானம் நிலை தடுமாறு கீழே விழுந்து வெடித்துள்ளது. இதனை உள்ளூர் தீயணைப்புப் படை உறுதிப்படுத்தி உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: No survivors: All 62 on board killed in Brazil plane crash
"யாரும் உயிருடன் இல்லை," என்று பிரேசிலிய ராணுவ காவல்துறையின் கர்னல் எமர்சன் மஸ்ஸெரா வின்ஹெடோவில் விபத்து நடந்த இடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. விமானத்தின் ரேடாரின்படி, விமானம் அதன் 17,000 அடி உயரத்திலிருந்து இரண்டு நிமிடங்களில் 4,000 அடிக்கு சரிந்துள்ளது. அதன் பிறகு அதன் ஜி.பி.எஸ் சிக்னல் இழந்துள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த பி.என்.ஓ நியூஸ் என்ற செய்தி நிறுவனம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுகிறது. பின்னர் வின்ஹெடோ நகரில் உள்ள வீடுகளின் மீது தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது. இதில் சில நொடிகளில் விமானத்தின் ஒரு பெரிய பகுதியில் தீப்பிடித்து எரிகிறது. பின்னர் விமானத்தில் இருந்து பெரிய கரும்புகை வானத்தை நோக்கி வெளியேறுவதாக உள்ளது.
பி.என்.ஓ நியூஸ் வெளியிட்ட செய்திகளின் படி, 62 பேர் சென்ற வியோபாஸ் 2283 என்ற விமானம் செங்குத்தாக கீழே விழுந்து வெடித்து சிதறி உள்ளது. அந்த இடமே தீப்பிழம்பாக மாறி உள்ளது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் விமானம் வந்து விழுந்த வேகத்தில் வெடித்து சிதறியது. அதில் ஏற்பட்ட தீப்பிளம்பு காண்போரை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது.
வியோ பாஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 58 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 4 பணியாளர்களுடன் சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான குருல்ஹாஸ் நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக உறுதிப்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்று அறிக்கையில் கூறவில்லை.
இந்த விபத்து குறித்து அறிந்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா,ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தெற்கு பிரேசிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் விபத்து குறித்து தகவல் தெரிவித்த நிலையில், அங்கிருந்தவர்களிடம் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை வைத்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
WATCH: New video shows Voepass Flight 2283 crashing into homes in Vinhedo, Brazil. Number of victims not yet known. pic.twitter.com/Ndwodo2Vcz
— BNO News (@BNONews) August 9, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.