கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் யார் யார்?

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் யார் யார் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

brazil president, jair bolsonaro, coronavirus, world news, world leaders coronavirus, donald trump, கொரோனா வைரஸ், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள், ஜெய்ர் பொல்சனாரோ, Tamil indian express, price charles, Boris Johnson, Russian Prime Minister Mikhail Mishustin
brazil president, jair bolsonaro, coronavirus, world news, world leaders coronavirus, donald trump, கொரோனா வைரஸ், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள், ஜெய்ர் பொல்சனாரோ, Tamil indian express, price charles, Boris Johnson, Russian Prime Minister Mikhail Mishustin

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பிரேசில் தலைநகரில் அதிபர் ஜெய்ர் பொல்ச்னாரோ முகக் கவசம் அணிந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்தினார். அப்போது அவர், “நான் நன்றாக சாதாரணமாக இருக்கிறேன். நான் இங்கே சுற்றி நடக்க விரும்புகிறேன், ஆனால் மருத்துவ பரிந்துரைகள் காரணமாக என்னால் முடியாது” என்று கூறினார்.

திங்கள்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பிரேசில் அதிபருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தை பலமுறை குறைத்துள்ளார். பிரேசில் உலகின் மிக மோசமாக வைரஸ் பரவிய நாடுகளில் ஒன்று. பிரேசிலில் 1.6 மில்லியனுக்கும் மேல் கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் உள்ளன. 65,000 பேர் உயிரிழந்தனர்.

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்ச்னாரோவுக்கு முன்னதாக பல உலகத் தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டுள்ளன. அதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் யார் யார் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மார்ச் 27ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இருப்பினும், ஜான்சனின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஏப்ரல் 6ம் தேதி தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். பின்னர், அவர் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தார்.

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின்

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு ஏப்ரல் 30ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது பணிகளை தற்காலிகமாக துணை பிரதமர் ஆண்ட்ரி பெலோசோவ் பார்த்துக்கொண்டர். ஆனால், பிரதமர் முக்கிய விஷயங்களில் தொடர்பில் இருப்பார் என்று கூறினார். 54 வயதான மிஷுஸ்டின் ஜனவரி மாதம் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இளவரசர் சார்லஸ்

இங்கிலாந்தின் பட்டத்து இளவரசர் சார்லஸுக்கு மார்ச் 25ம் தேதி பரிசோதனையில் லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. சார்லஸ் மார்ச் 30ம் தேதி தொற்று நோயிலிருந்து மீண்டு வெளியேவந்து சுய தனிமைப்படுத்திக்கொண்டார். பின்னர், ஒரு வீடியோவில் பேசிய இளவரசர் சார்லஸ், வைரஸில் இருந்து குணமடைந்தாலும் இன்னும் தான் சமூக இடைவெளியைக் கடைபிடித்து வருவதாகக் கூறினார்.

இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்த அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மேனுக்கு ஏப்ரல் மாதம் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. லிட்ஸ்மேனின் மனைவியும் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அதனால், அவர்கள் தனிமையில் வைக்கப்பட வேண்டியிருந்தது.

ஈரான் துணை அதிபர்

ஈரான் துணை அதிபர் மசொவ்மே எப்டேகர், ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பெண்கள் விவகாரங்களுக்கான அமைச்சர். இவர்தான் ஈரான் அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் பெண். அவருக்கு பிப்ரவரி 27ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக்

இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் மார்ச் 27ம் பரிசோதனையில் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிவித்தார். இவரை அடுத்து, 2 மணி நேரத்திற்குப் பிறகு, இங்கிலாந்து பிரதமருக்கும் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மாட் ஹான்காக் ட்விட்டரில், “மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி, கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய எனக்கு அறிவுறுத்தப்பட்டது. எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக என்னக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. நான் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன். நான் சுய தனிமைப்படுத்திக் கொள்கிறேன்” என்று அறிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்ஸிட்டுக்கான தலைமை பேச்சுவார்த்தையாளர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்ஸிட்டின் தலைமை பேச்சுவார்த்தையாளரான மைக்கேல் பார்னியருக்கு மார்ச் 19ம் தேதி பர்சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அவர் ட்விட்டரில் குறிப்பிடுகையில், “பரிசோதனையில் எனக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நான் நன்றாகவும் நல்ல மனநிலையுடனும் இருக்கிறேன். எனது குழுவைப் போலவே தேவையான அனைத்து வழிமுறைகளையும் நான் பின்பற்றுகிறேன்” என்று தெரிவித்தார்.

ஈரான் துணை சுகாதார அமைச்சர்

ஈரான் துணை சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சிக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொறு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார் என்று பிப்ரவரி 25ம் தேதிஐ.எல்.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பிரெஞ்சு கலாச்சார அமைச்சர்

பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் ஃபிராங்க் ரைஸ்டர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரெஞ்சு கலாச்சார அமைச்சகத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம் மார்ச் 9ம் தேதி 46 வயதான அரசாங்க உறுப்பினர் நன்றாக இருக்கிறார் என்று கூறியது.

ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சர்

ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு பரிசோதனையில் மார்ச் 13ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Brazil president jair bolsonaro coronavirus positive covid 19 affected world leaders who is who

Next Story
வகுப்புகள் முழுவதும் ஆன்லைனில் நடந்தால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் – அமெரிக்கா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com