/tamil-ie/media/media_files/uploads/2023/09/Larissa-Borges.png)
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபலமான பெண் உடற்பயிற்சியாளர் லாரிசா போர்ஜஸ்
Larissa Borges died: பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் லாரிசா போர்ஜஸ் (Larissa Borges). 33 வயதான இவர், தீவிரமாக உடற்பயிற்சிகள் மேற்கொள்வார்கள்.
இந்த உடற்பயிற்சிகள் தொடர்பான காணொலிகள் மற்றும் டிப்ஸ்களை சமூக வலைதளத்தில் பகிர்வார். இதனால் இவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் மாரடைப்புகள் ஏற்பட்டன.
ஒருகட்டத்தில் மயக்க நிலைக்கு சென்ற லாரிசா போர்ஜஸ் பின்னர் ஹோமா நிலைக்கு சென்று உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பை அவரது குடும்பத்தார் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், லாரிசா போர்ஜஸ் மது மற்றும் போதைப் பொருள் எடுத்துக்கொண்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார், “உடற் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது பற்றி பேச முடியும்” என்றார்.
தொடர்ந்து, அவரது காதலரிடமும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், லாரிசா போர்ஜஸின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல அவரது குடும்பத்தார்கள் நன்கொடை கோரியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.