கோர்ட் தீர்ப்பால் வரலாற்று சாதனையை இழந்த திருநம்பி

Freddy McConnell : வழக்கில் வெற்றி பெற்றிருந்தால் பிரிட்டன் வரலாற்றிலேயே குழந்தை பெற்றெடுத்த முதல் தந்தை என்ற பெயர் ஃபெரட்டிக்கு கிடைத்து இருக்கும்

transman, mother, father, birthchild, court , britain, verdict
transman, mother, father, birthchild, court , britain, verdict, பிரிட்டன், திருநம்பி, தந்தை, தாய், நீதிமன்றம், தீர்ப்பு

பிரிட்டனில் பெண்ணாக இருந்து ஆணாக மாறி குழந்தை பெற்றவருக்கு தந்தை என்ற அங்கீகாரம் தர நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஃபிரெட்டி மெக்கன்னல் என்பவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக இருந்து ஆணாக மாறினார். உடலின் வெளி உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாற்றப்பட்டாலும், கர்ப்பபை அகற்றப்படவில்லை. இந்நிலையில் செயற்கை முறையில் கருவுற்ற ஃபிரெட்டி கடந்த ஆண்டு குழந்தை பெற்றெடுத்தார். குழந்தையின் பிறப்பை பதிவு செய்ய சென்றபோது தன்னை தந்தை என பதிவிடுமாறு கேட்டார். அதற்கு பதிவாளர் குழந்தை பெற்றெடுப்பவர்களை தாய் எனதான் குறிப்பிட முடியும் என கூறியுள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தை நாடினார் ஃபெரட்டி.

குழந்தையின் நலம் கருதியே தன்னை தந்தை என பதிவிடுமாறு ஃபெரட்டி தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஆனால் முந்தைய காலங்களில் திருநம்பிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு தாய் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளதாக பதிவாளர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஃபெரட்டி கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

ஒருவேளை அவர் வழக்கில் வெற்றி பெற்றிருந்தால் பிரிட்டன் வரலாற்றிலேயே குழந்தை பெற்றெடுத்த முதல் தந்தை என்ற பெயர் ஃபெரட்டிக்கு கிடைத்து இருக்கும். அதே சமயத்தில் அவரது குழந்தையும் இங்கிலாந்து வரலாற்றில் தாய் என்ற நபர் இல்லாத குழந்தை என்ற பெயரை பெற்று இருக்கும்.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Britain court mother as a man or woman who gives birth

Next Story
இலங்கையில் யானையை 24 மணி நேரமும் துப்பாக்கியுடன் பாதுகாக்கும் ராணுவம்Srilanka esala perahera festival, Nadungamuwa Raja elephant, srilanka kandy buddha sacred tooth, இலங்கை, எசல பெரஹெரா திருவிழா, நடுங்காமுவா ராஜா யானை, srilanka buddha temple, Nadungamuwa Raja elephant sacred casket bearer, esala perahera festival procession,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com