Advertisment

தீபாவளி விருந்தில் அசைவ உணவுகள் மற்றும் மதுபானம்: லண்டனில் வசிக்கும் இந்துக்கள் அதிருப்தி

இங்கிலாந்து பிரதமர் வழங்கிய தீபாவளி விருந்தில் அசைவ வகை உணவுகள் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்த விவகாரம், அந்நாட்டில் வசிக்கும் இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
England PM

தீபாவளி பண்டிகையையொட்டி இங்கிலாந்து பிரதமர் அளித்த விருந்தில் அசைவ உணவுகள் மற்றும் மதுபானம் இடம்பெற்றிருந்ததற்கு பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தீபாவளியை முன்னிட்டு லண்டனில் உள்ள டௌனிங் வீதியில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்ட்ராமர் சார்பில் விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தில் அசைவ வகை உணவுகள் மற்றும் மதுபானம் ஆகியவை இடம்பெற்றன. இதற்கு லண்டனில் வாழும் இந்துக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: British Hindus object to non-veg, alcohol served at Downing Street Diwali reception

 

இந்துக்கள் பண்டிகை மற்றும் ஆன்மிகம் குறித்து புரிதலின்றி நிகழ்வு நடந்ததாக, இன்சைட் யுகே என்ற சமூக அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது போன்ற நிகழ்வுகளுக்கு முன்னர் முறையாக கலந்துரையாட வேண்டுமென சிலர் தெரிவித்துள்ளனர்.

“தீபாவளி வெறும் பண்டிகை மட்டுமல்ல. அது ஆழ்ந்த ஆன்மிக அர்த்தம் சார்ந்தது. புனிதம் மற்றும் பக்தியை வலியுறுத்துவதால் தான் தீபாவளியின் போது சைவ உணவுகள் பரிமாறப்படுகின்றன. மேலும், மதுபானம் தவிர்க்கப்படுகிறது“ என இன்சைட் யுகே அமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

“பிரதமரால் நடத்தப்பட்ட தீபாவளி விருந்தில் இடம்பெற்ற உணவுகள், அப்பண்டிகையின் மதம் மற்றும் மரியாதை சார்ந்த புரிதலின்றி நடத்தப்பட்டதையே சுட்டிக்காட்டுகிறது. மேலும், நிகழ்வுக்கு முன்னர் இந்து மத அமைப்புகள் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது“ என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், பன்முக கலாசாரத்தை போற்றும் விதமாக நடைபெறும் நிகழ்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“சரியான ஆலோசனை மற்றும் புரிதல் இல்லாமல் இந்நிகழ்வு நடத்தப்பட்டது கவலை அளிக்கிறது. எதிர்பாராத வகையில் இது நடந்திருந்தாலும், ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது“ என எழுத்தாளர் மற்றும் ஆன்மிக சொற்பொழிவாளர் பண்டிட் சதிஷ்.கே.ஷர்மா தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்வில் கலந்து கொள்ள தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் சில இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் பல்வேறு, சமூகத்தினரை அழைத்து இக்கூட்டம் நடத்தப்பட்டதாக அரசு தரப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. சீக்கியர்கள் உள்ளிட்ட பல பிரிட்டன் - இந்திய தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் உள்ளிட்டோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி இதில் கலந்து கொண்டனர். 

"உங்கள் பாரம்பரியம் மற்றும் மரபுகளை நாங்கள் மதிக்கிறோம். நமக்குள் பகிரப்படும் மதிப்புகளை அங்கீகரித்து இந்த தீபாவளியை கொண்டாடுவோம். இருளை அகற்றி ஒளியை நிலைநிறுத்துவோம்“ என இங்கிலாந்து பிரதமர் ஸ்ட்ராமர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

England Diwali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment