Advertisment

நியூயார்க் சுரங்கபாதையில் துப்பாக்கிச் சூடு; 23 பேர் காயம்

நியூயார்க்கின் ப்ரூக்ளின் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 23 பேர் காயம்; சந்தேக நபருக்கு போலீஸ் வலைவீச்சு

author-image
WebDesk
New Update
நியூயார்க் சுரங்கபாதையில் துப்பாக்கிச் சூடு; 23 பேர் காயம்

Brooklyn subway shooting: 23 people injured after gunman fired 33 bullets: நியூயார்க் சுரங்கப்பாதையில், காரில் இரண்டு புகை குண்டுகளை வெடிக்கச் செய்து துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பரபரப்பான காலை நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் குறைந்தது 20 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் தனியாக செயல்பட்டதாகவும், உடனடியாக குற்றம் நடந்த இடத்தில் இருந்து தப்பியோடியதாகவும் நியூயார்க் போலீசார் தெரிவித்தனர்.

Advertisment

புரூக்ளினில் உள்ள பரபரப்பான சுரங்கப்பாதை நிலையத்தில் எரிவாயு முகக்கவசம் மற்றும் கட்டுமான வேலை செய்பவர்களின் உடை அணிந்த ஒரு நபர் புகை குண்டுகளை வெடிக்கச் செய்து, குறைந்தது 33 தோட்டாக்களை சரமாரியாகச் சுட்டார். இதில், பத்து பேர் நேரடியாக துப்பாக்கிச் சூடுகளால் தாக்கப்பட்டனர், இதில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குறைந்தது 29 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள், புகையை உள்ளிழுத்தல் மற்றும் பிற நிலைமைகளுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட அனைவரும் காயங்களுடன் உயிர் பிழைப்பார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்காக போலீசார் நகரத்தை சுற்றி வளைத்து, தாக்குதலில் தொடர்புடைய வேனை வாடகைக்கு எடுத்தவரைக் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.

மன்ஹாட்டனில் இருந்து சுமார் 15 நிமிட பயணத்தில் ஹிஸ்பானிக் மற்றும் ஆசிய சமூகங்கள் வசிக்கும் சன்செட் பார்க் அருகில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு வெடித்தது.

போலீஸ் கமிஷனர் கீச்சன் செவல், தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக விசாரிக்கப்படவில்லை, ஆனால் நாங்கள் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் நோக்கம் தெரியவில்லை என்று கூறினார்.

அதிகாரிகள் சம்பவ இடத்தில் 9 மிமீ அரை தானியங்கி கைத்துப்பாக்கி, மேகசின், ஒரு ஹேட்செட், வெடித்த மற்றும் வெடிக்காத புகை குண்டுகள், ஒரு கருப்பு குப்பை பை, ஒரு டிராலி வண்டி, பெட்ரோல் மற்றும் ஒரு U-Haul வேனின் சாவி ஆகியவற்றை கைப்பற்றியதாக உளவுத்துறை தலைவர் ஜேம்ஸ் எஸ்சிக் கூறினார்.

சந்தேக நபர் ஃபிராங்க் ஜேம்ஸ் யார்?

செய்தியாளர்கள் சந்திப்பில், U-Haul வாகனத்தை வாடகைக்கு எடுத்ததாக கூறப்படும் ஃபிராங்க் ஜேம்ஸ் என்பவர் "சந்தேகப்படும் நபர்" என்று போலீசார் கூறினர்.

குற்றம் நடந்த இடத்தில் வேனின் சாவியை மீட்டதாகவும், அது பிலடெல்பியாவில் வாடகைக்கு விடப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஃபிராங்க் ஜேம்ஸ் பிலடெல்பியா மற்றும் விஸ்கான்சினில் முகவரிகளைக் கொண்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுரங்கப்பாதை தாக்குதல் நடத்திய நபர், ஆரஞ்சு நிற பேண்ட், சாம்பல் நிற ஸ்வெட்ஷர்ட், பச்சை நிற ஹெல்மெட் மற்றும் அறுவை சிகிச்சை முகக்கவசம் அணிந்திருந்த, கனமான உடலமைப்பு கொண்டவர் என நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் போலீஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இணையத்தில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

புரூக்ளினில் நடந்த சுரங்கப்பாதை தாக்குதலில் சந்தேகப்படும் நபர், சமீப ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் டஜன் கணக்கான வீடியோக்களை வெளியிட்டதாகத் தெரிகிறது. அதில் அவர் கடுமையான வெறுப்புணர்வூட்டும் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் சமீபத்தில் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸின் கொள்கைகளை விமர்சித்துள்ளார்.

prophetoftruth88 என்ற பயனர்பெயரைச் சேர்ந்த ஒரு சேனல் வெளியிட்ட யூடியூப் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஜேம்ஸின் ஸ்கிரீன் ஷாட்டை காவல்துறை வெளியிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

America World News New York
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment