Advertisment

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி குடும்பம் கடத்தல்; சந்தேக நபரிடம் போலீஸ் தீவிர விசாரணை

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இந்திய வம்சாவளி சீக்கிய குடும்பம் கடத்தல்; சந்தேக நபரை பிடித்து காவல்துறை தீவிர விசாரணை

author-image
WebDesk
New Update
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி குடும்பம் கடத்தல்; சந்தேக நபரிடம் போலீஸ் தீவிர விசாரணை

அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட சீக்கிய குடும்பத்தை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் செவ்வாய்கிழமை தற்கொலைக்கு முயன்றார், மேலும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சீக்கிய குடும்பத்தை இன்னும் காணவில்லை.

Advertisment

பாதிக்கப்பட்டவர்களின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்திய 48 வயதான ஜீசஸ் சல்காடோவை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டதாக மெர்சிட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மெர்சிடில் உள்ள ஒரு வணிகத்தில் இருந்து துப்பாக்கி முனையில் குடும்பத்தினர் திங்கள்கிழமை கடத்தப்பட்டதாக அலுவலகம் மேலும் விவரங்களை வழங்காமல் கூறியது.

இதையும் படியுங்கள்: வேதியியலுக்கான நோபல் பரிசு; மூலக்கூறு ஆய்வு தொடர்பாக 3 பேருக்கு அறிவிப்பு

உள்ளூர் சீக்கிய சமூக அமைப்பின் தலைவரான நைன்தீப் சிங்கின் கூற்றுப்படி, நால்வரும் அவர்களுக்குச் சொந்தமான எரிவாயு நிலையம் மற்றும் கன்வீனியன்ஸ் ஸ்டோரில் இருந்து கடத்தபட்டனர்.

மெர்சிட் நகருக்கு வடக்கே 14 கிமீ தொலைவில் உள்ள நகரமான Atwater இல் உள்ள ஏ.டி.எம்.,மில் இருந்து துப்பறியும் நபர்கள் கண்காணிப்பு புகைப்படத்தைப் பெற்றனர், மேலும் "அந்த நபர் அசல் கடத்தல் காட்சியின் கண்காணிப்பு புகைப்படத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்" என்று அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு காட்சிகளில் காணக்கூடிய சந்தேக நபரின் இரண்டு ஸ்டில் படங்களை ஷெரிப் அலுவலகம் வெளியிட்டது, மேலும் அவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியது.

publive-image

சல்காடோவை சந்தேக நபராக அடையாளப்படுத்தியதாகவும், போலீசார் வருவதற்கு முன்பாக அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாகவும் துப்பறிவாளர்களுக்கு தகவல் கிடைத்தது, என்று அவர் எங்கு காவலில் வைக்கப்பட்டார் என்பதைக் குறிப்பிடாமல் அறிக்கை கூறியது. மேலும் விவரங்களை வழங்க ஷெரிப் அலுவலகம் புதன்கிழமை செய்தி சந்திப்பை நடத்த உள்ளது.

கடத்தல்காரன் குழந்தை அரூஹி தேரி; குழந்தையின் தாய், ஜஸ்லீன் கவுர், 27; தந்தை ஜஸ்தீப் சிங், 36; மற்றும் மாமா அமன்தீப் சிங், 39, ஆகியோரை கடத்தியதாக ஃபேஸ்புக்கில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வீடியோவில் மெர்சிட் கவுண்டி ஷெரிப் வெர்ன் வார்ன்கே கூறினார். கடத்தல்காரர் எந்த விதமான மீட்கும் கோரிக்கையோ அல்லது தொடர்புகளோ செய்யவில்லை என்று வார்ன்கே கூறினார்.

மத்திய கலிபோர்னியாவில் உள்ள பஞ்சாபி சீக்கிய சமூக அமைப்பான ஜகாரா இயக்கத்தின் நிர்வாக இயக்குனர் நைன்தீப் சிங், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கடத்தப்பட்ட குடும்பம் அவர்களின் எரிவாயு நிலையத்திலிருந்து கடத்தப்பட்டதாக தன்னிடம் கூறியதாக கூறினார்.

"அவர்கள் அதிர்ச்சியிலும், குடும்பம் மற்றும் குழந்தையைப் பற்றி கவலைப்பட்டனர். அவர்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர்,” என்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில்லாத நைன்தீப் சிங் கூறினார்.

கடத்தல்காரர் தனது தடங்களை மறைக்கும் முயற்சியில் குறிப்பிடப்படாத ஆதாரங்களை அழித்ததாக துப்பறிவாளர்கள் நம்புவதாக ஷெரிப் கூறினார்.

திங்களன்று தீயணைப்பு வீரர்கள் அமன்தீப் சிங்கிற்கு சொந்தமான பிக்கப் டிரக் தீப்பிடித்து எரிவதை கண்டுபிடித்ததாக ஷெரிப் அலுவலகம் செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மெர்சிட் காவல் துறை அதிகாரிகள் அமன்தீப் சிங்கின் வீட்டிற்குச் சென்றனர், அங்கு ஒரு குடும்ப உறுப்பினர் அவரையும் தம்பதியரையும் அணுக முயன்றார். அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியாததால், அவர்கள் காணாமல் போனதை புகாரளிக்க மெர்சிட் கவுண்டி ஷெரீப் அலுவலகத்தை அழைத்தனர், என்று அலுவலகம் கூறியது.

எஃப்.பி.ஐ, கலிபோர்னியா நீதித்துறை மற்றும் பிற உள்ளூர் சட்ட அமலாக்க முகவர் விசாரணைக்கு உதவுவதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மெர்சிட் என்பது சான் ஜோவாகின் பள்ளத்தாக்கில் சான் பிரான்சிஸ்கோவிற்கு தென்கிழக்கே 200 கிமீ தொலைவில் 86,000 மக்கள் வசிக்கும் நகரம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment