கலிஃபோர்னியாவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியினர்.
California kidnapping: அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி 8 மாத பச்சிளம் பெண் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 8 மாத பெண் குழந்தை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்.
Advertisment
நான்கு பேரின் உடல்களும் புதன்கிழமை மாலை இந்தியானா ரோடு & ஹட்சின்சன் சாலைக்கு அருகிலுள்ள பழத்தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக மெர்சிட் கவுண்டி ஷெரிப் வெர்ன் வார்ன்கே (வெர்ன் வார்ன்கே (Vern Warnke ) தெரிவித்தார்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கடத்தியதில் போலீஸ் அதிகாரிகளால் தேடப்படும் சந்தேக நபர்
காவல்துறையினரின் கூற்றுப்படி, பழத்தோட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு பண்ணை தொழிலாளி இந்தச் சடலங்களை கண்டுள்ளார். பின்னர் அவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்த நிலையில் புதன்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பின் போது ஷெரிப் வார்ன்கே, "நான் உணரும் கோபத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை” என்றார். இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட காணொலியில், “8 மாத குழந்தையான அரோகி தேரி அவரின் தாயார் ஜாஸ்லின் கவுர் (27) தந்தை ஜஸ்தீப் சிங் மற்றும் உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் கடத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதற்கிடையில் மறுதினமே கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசாரால் கைது செய்யப்பட்டவர் 48 வயதான ஜீசஸ் மானுவல் சல்காடோ ஆவார். இது குறித்து, சல்காடோ பற்றி ஷெரிப் வார்ன்கே கூறுகையில், "இவருக்கு நரகத்தில் ஒரு சிறப்பு இடம் உண்டு” என்றார்.
ஜஸ்தீப்பின் பெற்றோர் டாக்டர் ரந்தீர் சிங் மற்றும் கிர்பால் கவுர் ஆகியோர் பஞ்சாப்பின் ஹோஷியார்பூர் தாண்டா தொகுதியில் உள்ள ஹர்சி பிண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் யார் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“