ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவலை திருடிய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் பரிதாப நிலை!

ஃபேஸ்புகின் சர்ச்சையால் இந்த நிறுவனம் தனது மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேர்ந்ததால்

ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திடீரென்று மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வாழும் 8.7 கோடி ஃபேஸ்புக் உறுப்பினர்களிடம் தனிப்பட்ட தகவல்களை, அவர்களது அனுமதியின்றி பகிர்ந்து கொள்ளப்பட்டது மாபெரும் குற்றச்சாட்டு எழுந்தது.  யூசர்களின் இந்த தரவுகளை  அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கோடிக்கணக்கான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் சட்டவிரோதமாக பரிமாறப்பட்டதாக புகார் எழுந்தது. அதனைத்தொடர்ந்து,  ஃபேஸ்புக் நிறுவனர்  மார்க் ஜூக்கர்  பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரினார்.  அத்துடன், ஐநா சபையிலும் மார்க் நேரடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  இந்த சம்பவத்தினால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பு பெருமளவில் குறைந்தது. சந்தையில் ஃபேஸ்புக் நிறுவனம் பெரும் இழப்பையும் சந்தித்தது.

இந்நிலையில், ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை  முறைகேடாக பயன்படுத்திய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திடீரென்று மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஃபேஸ்புகின் சர்ச்சையால் இந்த நிறுவனம் தனது மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேர்ந்ததால் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

 

×Close
×Close