கனடாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய லிபரல் கட்சி? பிரதம வேட்பாளர் மார்க் கார்னி வெற்றி

தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க லிபரல் கட்சிக்கு 172 இடங்கள் தேவைப்படுகிறது. அவர்கள் 43.1% வாக்குகளைப் பெற்றுள்ளனர். அதேநேரத்தில் கன்சர்வேடிவ் கட்சி 41.7% வாக்குகளைப் பெற்றனர்.

தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க லிபரல் கட்சிக்கு 172 இடங்கள் தேவைப்படுகிறது. அவர்கள் 43.1% வாக்குகளைப் பெற்றுள்ளனர். அதேநேரத்தில் கன்சர்வேடிவ் கட்சி 41.7% வாக்குகளைப் பெற்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Canada results

கனடாவில் 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதை தொடர்ந்து, கனடா மீதான வரியை அதிரடியாக அதிகரித்தார். உள்நாட்டு அரசியல் பிரச்சினை, டிரம்ப் வரி விதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் லிபரல் கட்சியை சேர்ந்த ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Canada Election Results 2025 LIVE

இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த மாதம் 14 ஆம் தேதி கனடாவின் 24-வது பிரதமராக பதவியேற்றார். கனடா நாடாளுமன்றத்தின் பதவிகாலம் வருகிற அக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில் பிரதமர் மார்க் கார்னி நாடாளுமன்றத்தை கலைத்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார். 

இதனைத் தொடர்ந்து, நேற்று திங்கள்கிழமை (ஏப்ரல் 28) கனடா நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னி களமிறங்கினார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ் பிரதமர் வேட்பாளாரக களமிறங்கினார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Advertisment
Advertisements

343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில், காலை 8.30 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் துவக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இந்தத் தோ்தலில், லிபரல் கட்சி 167 இடங்களில் முன்னிலை வகித்தனர் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று கனடா செய்தி நிறுவனமான 'சிபிசி' தெரிவித்துள்ளது. மேலும்,  கன்சர்வேடிவ் கட்சி 145 இடங்களிலும், பிளாக் கியூபெகோயிஸ் 23 இடங்களிலும், ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயகக் கட்சி 7 இடங்களிலும், கனடாவின் பசுமைக் கட்சி 1 இடங்களிலும் முன்னிலை வகித்தன என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க லிபரல் கட்சிக்கு 172 இடங்கள் தேவைப்படுகிறது. அவர்கள் 43.1% வாக்குகளைப் பெற்றுள்ளனர். அதேநேரத்தில் கன்சர்வேடிவ் கட்சி 41.7% வாக்குகளைப் பெற்றனர்.  லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை அமைக்குமா என்பது இன்றிரவு வெளியாகும் தேர்தல் முடிவுக்குப் பின்னரே தெரிய வரும்.  

கனடா பிரதம தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் பிரதமராக மார்க் கார்னி வெற்றி பெற்றார்.

Canada

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: