Advertisment

ரஷியாவுக்கு பைடன் எச்சரிக்கை.. கனடாவில் தொடரும் போராட்டம்.. மேலும் செய்திகள்

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
ரஷியாவுக்கு பைடன் எச்சரிக்கை.. கனடாவில் தொடரும் போராட்டம்.. மேலும் செய்திகள்

உக்ரைன் விவகாரம்: ரஷியாவை மீண்டும்

Advertisment

எச்சரித்த அமெரிக்க அதிபர்

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை குறி வைத்து ரஷியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷியாவுக்கும் நீண்ட காலமாகவே பனிப்போர் நீடித்து வருகிறது. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

ஆனால் ரஷியா எந்த நேரத்திலும் வான்வழி குண்டுவீச்சுடன் படையெடுப்பை தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

எனவே உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளன. 

இதனிடையே உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டு  இருந்த ராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷிய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. 

இந்நிலையில் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷியா குறிவைத்தால், அதற்காக தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம், இது இன்னும் சாத்தியமாகும். உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷியா குறிவைத்தால், நாங்கள் ரஷ்யாவுடன் நேரடி மோதலை நாடவில்லை என்றாலும், நாங்கள் கடுமையாக பதிலடி கொடுப்போம்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். 

கனடாவில் அவசர நிலை பிரகடனத்திற்கு கடும் எதிர்ப்பு..!

கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி ஓட்டுநர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது.

அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த மாதம் 29-ந்தேதி லாரிகளுடன் தலைநகர் ஒட்டாவாவில் குவிந்து போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கான லாரிகளுடன் ஒட்டாவாவில் உள்ள சாலைகள் அனைத்தையும் ஆக்கிரமித்தனர்.

போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கினர். ஆனாலும் போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை.

மாறாக லாரி ஓட்டுநர்களின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகியதால் ஒட்டாவாவில் இருந்து நாடு முழுவதற்கும் போராட்டம் பரவியது.

இந்த போராட்டம் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. குறிப்பாக, லாரி ஓட்டுநர்களின் இந்த போராட்டத்தை அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்க வேண்டும் என கனடாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

தென்கொரியா பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57,177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தென்கொரியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 14,62,421 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் மேலும் 61 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 163 ஆக உயர்ந்துள்ளது.

தென்கொரியாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 8,03,005 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 6,52,253 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா பரவி வந்த நிலையில் தற்போது வைரஸ் தொற்று சற்று குறைவாக பதிவாகி வருகிறது. இதன்படி பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.18 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,42,253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பிரான்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை தற்போது 2,18,77,555 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் மேலும் 390 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 579 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்சில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 1,75,95,367 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 41,46,609 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷியாவுக்கு ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை.. இதய எமோஜி அனுப்பினால் சிறை.. மேலும் டாப் 5 உலகச் செய்திகள்

சோமாலியா: கண்ணி வெடியில் சிக்கி நால்வர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

அல்-கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவர்கள் அங்கு போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சோமாலியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஜவஹர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து செல்லும் சாலையில் பயங்கரவாதிகள் கண்ணி வெடி ஒன்றை புதைத்து வைத்திருந்தனர்.

அந்த சாலையில் வந்த ஆட்டோ ஒன்று கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஒட்டக வியாபாரிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி  உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அல் ஷபாப் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என சோமாலியா அரசு குற்றம் சாட்டியுள்ளது

போதைப் பொருள் கடத்தல் வழக்கு:

ஹோண்டுராஸ் முன்னாள் அதிபர் கைது

மத்திய அமெரிக்க நாடானா ஹோண்டுராஸில் 2014 முதல் 2021 வரை ஹோண்டுராஸ் நாட்டின் அதிபராக ஜுவன் ஒர்லெண்டோ ஹெர்னெண்டிஸ் அல்வரடொ செயல்பட்டு வந்தார். இவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஹோண்டுராசில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்தது. ஹோண்டுராஸ் அதிபராக பதவி வகித்தபோது போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும், போதைப்பொருள் கடத்தல், ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாகவும் ஜூவன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஹோண்டுராஸ் முன்னாள் அதிபர் ஜூவன் மீது அமெரிக்காவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், போதைபொருள் கடத்தல் வழக்கில் ஹோண்டுராஸ் முன்னாள் அதிபர் ஜூவனை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனால், ஜூவனை அமெரிக்காவுக்கு நாடு கடத்த ஹோண்டுராஸ் அரசிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. நாடு கடத்தல் விவகாரம் தொடர்பாக ஹோண்டுராஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் ஜூவனை உடனடியாக கைது செய்ய கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் நேற்று தலைநகர் டெகுசிகல்பாவில் உள்ள ஜூவன் வீட்டை அதிரடியாக சுற்றி வளைத்தனர். வீட்டில் இருந்த ஜூவனை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யபப்ட்ட ஜூவன் விரைவில் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment