கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று (திங்கட்கிழமை) அறிவிப்பார் என தி குளோப் அண்ட் மெயிலை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெயரிடப்படாத மூன்று அதிகாரிகளின் கூற்றுப் படி, புதன்கிழமை திட்டமிடப்பட்ட ஒரு முக்கிய தேசிய காக்கஸ் கூட்டத்திற்கு முன்பாக ட்ரூடோ பதவி விலகுவதற்கான தனது அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அறிவிப்பின் சரியான நேரம் உறுதியாக தெரியவில்லை.
ட்ரூடோ உடனடியாக பதவி விலகுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக தொடர்வாரா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
நிதியமைச்சர் டொமினிக் லெப்லாங்குடன் ட்ரூடோ பேசியதாக கூறப்படுகிறது. அதில், டொமினிக் இடைக்காலத் தலைவராகவும், பிரதமராகவும் பதவியேற்க விரும்புவாரா என்பது குறித்து கலந்துரையாடியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ட்ரூடோ 2013 முதல் லிபரல் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார், அந்தக் கட்சி போராடிக்கொண்டிருந்த நேரத்தில், அதன் வரலாற்றில் முதல் முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் மூன்றாவது இடத்திற்கு வீழ்ந்தது.
பிரதமராக அவரது தலைமை கட்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் வெளியேறுவது கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போய்விடும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரம், அக்டோபர் இறுதியில் தேர்தல் வரக்கூடிய நேரத்தில் இந்த எதிர்க்கட்சிக்கு வாய்ப்பாக அமையும் எனவும் கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Canada PM Justin Trudeau expected to announce resignation as early as Monday: Report