கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களே அறிவுறுத்திய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ட்ரூடோ, அடுத்த தேர்தலிலும் கட்சியை வழிநடத்துவேன் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கனடாவில் ஆட்சியில் இருக்கும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், நேற்றைய தினம் சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அடுத்த தேர்தலுக்குள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த 20 எம்.பிக்கள் போர்க்கொடி உயர்த்திய நிலையில், இக்கூட்டம் நடத்தப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Canada's Trudeau vows to lead Liberal Party in next election despite calls to step down
இக்கூட்டம் முடிவடைந்த பின்னர், அடுத்த தேர்தல் வரை லிபரல் கட்சியை தான் வழிநடத்துவேன் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ, பதவி விலக முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நூற்றாண்டுகளுக்கும் மேலான கனடாவின் தேர்தல் வரலாற்றில், எந்தவொரு பிரதமரும் தொடர்ந்து 4 முறை தேர்தலில் வெற்றி கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, லிபரல் கட்சி எம்.பிக்கள் 153 பேர் ட்ரூடோவிற்கு ஆதரவு அளிப்பதால், அவரது பதவிக்கு ஆபத்தில்லை எனக் அமைச்சர்கள் கூறுகின்றனர்.
எனினும் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில், நீண்ட காலமாக தங்கள் வசமிருந்த டொரண்டோ மற்றும் மாண்ட்ரேல் ஆகிய இடங்களில் லிபரல் கட்சி தோல்வியை தழுவியது. இத்தோல்விகள், ட்ரூடோவின் தலைமைப் பொறுப்பை கேள்விக்குள்ளாக்கின.
கனடாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. மற்றொரு கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் காரணத்தினால் தான், லிபரல் கட்சி தற்போது ஆட்சியில் உள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரான ஃப்ரன்கோய்ஸ் ப்ளன்செட், புதிய ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென தங்கள் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க லிபரல் கட்சி தவறவிட்ட சூழலை பயன்படுத்தி, அக்கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற பணியாற்ற வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ட்ரூடோவுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள டொரண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் நெல்சன் வைஸ்மேன், ட்ரூடோ மீது அதிருப்தி அடைந்துள்ள எம்.பி.க்கள் அவரை பதவி விலக வைப்பதில் தங்கள் வரைமுறையைக் கடந்து செயல்பட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2016-ஆம் ஆண்டு லிபரல் கட்சி தங்கள் சட்டதிட்டங்களை திருத்தி எழுதியதன் படி, ஆட்சியில் இருக்கும் போது கட்சி தலைவருக்கு எதிராக செயல்பட முடியாது எனக் குறிப்பிட்டுள்ள நெல்சன் வைஸ்மேன், ட்ரூடோவுக்கு சாதகமான முடிவாக இது அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியினர் சுமார் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போது, தனது தந்தையின் மரபுகளை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ட்ரூடோ, முதன்முறையாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினார். எனினும், கோவிட் தொற்றின் தாக்கம் மற்றும் அதிகரித்து வரும் விலைவாசி உள்ளிட்டவைகள் மூலம் தற்போது பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டதால், ட்ரோடோவுக்கு எதிரான சூழல் நிலவி வருகிறது.
சமீபத்திய கருத்துக் கணிப்புகளின் படி சுமார் 25 முதல் 38 விழுக்காடு வரை லிபரல் கட்சியினரை விட எதிர்கட்சியினர் வெற்றிவாய்ப்பில் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.