Canadian Prime Minister Justin Trudeau took a knee in solidarity with protesters : கனட பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ நேற்று ஒட்டாவாவில் நடைபெற்ற கறுப்பின மக்களுக்கு ஆதரவான Black Lives Matter போராட்டத்தில் பங்கேற்றார். கனடாவின் பாராளுமன்றம் அமைந்திருக்கும் இடமான பார்லிமெண்ட் ஹில் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார் ஜெஸ்டின் ட்ரூடோ.
கறுப்பு நிற மாஸ்க் அணிந்து வந்த அவர், போராட்டம் நடைபெறுவதற்கு முந்தைய தினம் வரை இந்த போராட்டத்தில் பங்கேற்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் போராட்டத்தில் பங்கேற்ற அவர் கறுப்பின மக்களுக்காக, மண்டியிட்டு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். அவர் இந்த நிகழ்வில் பேசவில்லை. இருப்பினும் மற்ற பேச்சாளர்களின் கருத்தை ஆதரிக்கும் வகையில் கைகளை தட்டி ஆரவாரப்படுத்தினார்.
49 வயதான ஜார்ஜ் ஃப்ளோய்ட் கள்ள நோட்டினை பயன்படுத்தினார் என்று அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தது. அவரை அழைத்து சென்ற காவல்துறையினர் ஜார்ஜின் கழுத்தில் கால் ஒன்றை வைத்து அழுத்தினார். அவர் என்னால் மூச்சுவிட இயலவில்லை என்று கூறியும் அந்த காவலர் அதனை பொருட்படுத்தவில்லை. ஜார்ஜ் சில நிமிடங்களில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உலக அளவில் கண்டன குரல்களும், அமெரிக்கா முழுவதும் கடுமையான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நாள் வரை அமெரிக்காவில் வசிக்கும் கறுப்பின மக்களுக்கும் வெள்ளையின மக்களுக்கும் இடையே நிலவி வரும் பாகுபாடுகள் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“