Car blasts kills daughter of Russian known as Putin’s brain today world news: இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
புதினின் மூளையாக செயல்படுவரின் மகள் கார் குண்டுவெடிப்பில் பலி
ரஷ்ய அதிபர் "புதினின் மூளை" என்று அடிக்கடி அழைக்கப்படும் ஒரு செல்வாக்கு மிக்க ரஷ்ய அரசியல் கோட்பாட்டாளரின் மகள் மாஸ்கோவின் புறநகரில் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: ஆப்கானிஸ்தானில் மறைமுகமாக கல்வி கற்கும் பெண்கள்; தாலிபான்களை எதிர்த்து பொது வெளியிலும் நடமாட்டம்
29 வயதான தொலைக்காட்சி வர்ணனையாளர் டாரியா டுகினா சனிக்கிழமை இரவு அவர் ஓட்டிச் சென்ற எஸ்.யூ.வி.,யில் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ரஷ்ய விசாரணைக் குழுவின் மாஸ்கோ கிளை தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்புக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஆனால் தாக்குதலானது அவரது தந்தையும் ஒரு தேசியவாத தத்துவவாதி மற்றும் எழுத்தாளருமான அலெக்சாண்டர் டுகின்- ஐ இலக்காக கொண்டு செய்யப்பட்டது என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு முன் ஜாமீன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், போலீஸ் உயர் அதிகாரிகளையும் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/IMRAN-KHAN.jpg)
இதைத் தொடர்ந்து இம்ரான் கான் எப்போது வேண்டும் என்றாலும் கைதாக கூடும் என்று பாகிஸ்தானில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான்கானுக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. வரும் 25 ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சிங்கப்பூரில் ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் சட்டத்தை ரத்து செய்ய முடிவு
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ஆண்களுக்கிடையிலான பாலுறவைக் குற்றமாக்கும் காலனித்துவ காலச் சட்டத்தை அரசாங்கம் ரத்து செய்யும் என்றும், ஆனால் நாட்டின் அரசியலமைப்பைத் திருத்துவதன் மூலம் ஓரினச்சேர்க்கைத் திருமணங்களைத் தடுக்கும் விதிகள் வலுப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/lgbtq.jpg)
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377A என அறியப்படும் ஆண்களுக்கு இடையேயான உடலுறவுக்கான சட்டப்பூர்வ தடையை நீக்குவது "சரியான செயல், பெரும்பாலான சிங்கப்பூரர்கள் இப்போது ஏற்றுக்கொள்வார்கள்" என்று லீ ஞாயிற்றுக்கிழமை தனது தேசிய தினப் பேரணி உரையில் கூறினார்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றத்தை லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கைகள் மற்றும் வினோதமான சமூகம் வரவேற்றாலும், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தின் வரையறையைப் பாதுகாக்க அரசு அரசியலமைப்பை மாற்றும் என்று லீ கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil