சிறுவன் தெரியாமல் செய்த செயலை வஞ்சத்துடன் பழி வாங்கிய கொடூர கர்ப்பிணி பெண்!

அவனை விழ வைக்கிறேன் என்று தனது கணவனிடம் சபதம் செய்யும் அந்த பெண்

இந்த வீடியோவை முதலில் பார்ப்பவர்களுக்கு கூட  அதிர்ச்சியை ஏற்படுத்தும். அது எப்படி கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் ஒரு பெண்ணால் இப்படி செய்ய முடிந்ததுக் கூட கேள்வி  கேட்க முடியும். அதே நேரத்தில் அவர், கர்ப்பிணி பெண் என்ற உண்மை தெரிந்தால் இன்னும் கோபம் அதிகமாகும்.

சீனாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கடந்த 19 ஆம் தேதி இந்த சம்பவம் நடைப்பெற்றது. இப்போது அந்த 4 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.   அவரின் நெஞ்சு  பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுவனுக்கு தற்போது சிகிச்சை அளிக்க்ப்பட்டு வருகிறது.

முதலில், தனது மகன் தான் தவறுதலாக விழுந்து விட்டான் என்று  நினைத்த பெற்றோர்களுக்கு, அவன் மயக்கம் தெளிந்த பின்பு கூறிய தகவல் தலையில் இடியை போட்டது போல் இருந்துள்ளது.  அதன் பின்பு, அதே ஹோட்டலுக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவை பார்த்த பின்பு தான் உண்மை விளங்கியுள்ளது.

அந்த வீடியோவில்,  ஹோட்டலுக்குள் வேகமாக ஓடி வரும் அந்த சிறுவன், வேகமாக  ஸ்கீரினை தள்ளுகிறான். அப்போது அருகில் இருக்கும்  டெபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கர்பிணி பெண் மீது அந்த ஸ்கீரின் பட்டுவிடுகிறது. அதை கவனிக்காமல் சிறுவன்   சூறாவளி போல் ஓடி விடுகிறான்.  கண்டிப்பாக அவன் மறுபடியும் வருவான். அவனை விழ வைக்கிறேன் என்று தனது கணவனிடம் சபதம் செய்யும் அந்த பெண் சொல்லியது போலவே சிறுவன் ஓடி வரும் போது காலை  நீட்டி அவனை விழு வைக்கிறாள்.

 

×Close
×Close