Advertisment

கொரோனா வைரஸ் அறிகுறிகளை 9-ஆக உயர்த்தி அறிவித்த சி.டி.சி!

ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாக இருக்கும் இந்த அறிகுறிகள் நாட்களாக அதிகரிக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CDC adds 6 new coronavirus symptoms

CDC adds 6 new coronavirus symptoms : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் ஊரடங்கு பல்வேறு நாடுகளில் போடப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் ஆகிய மூன்று மட்டுமே இதற்கு முன்பு சென்டர்ஸ் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் மற்றும் ப்ரெவென்சன் (Centers for Disease Control and Prevention) மையம் கூறியிருந்தது.

Advertisment

மேலும் படிக்க : புற்றுநோயாளியை காக்க ரயிலில் விரைந்து வந்த மருந்து – ரயில்வே நிர்வாகத்துக்கு குவியும் பாராட்டு

தற்போது அந்த அறிகுறிகளை 9-ஆக உயர்த்தி அறிவித்துள்ளது சி.டி.சி உடல் குளிர்ச்சி அடைதல், குளிரோடு கூடிய நடுக்கம், உடல் தசைகளில் வலி, தலைவலி, தொண்டை கரகரப்பு மற்றும் மணம் மற்றும் சுவையை அறியமுடியாமல் போவது போன்றவற்றையும் இந்நோயின் அறிகுறிகளாக சி.டி.சி. அறிவித்துள்ளது.

உலக சுகாதார மையம் அறிவிப்பின் படி, காய்ச்சல், தலைவலி மற்றும் சளி இருப்பது சாதாரணமானது. சிலருக்கு அவ்வபோது உடல்வலி ஏற்படுவது வழக்கம். ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாக இருக்கும் இந்த அறிகுறிகள் நாட்களாக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment