/tamil-ie/media/media_files/uploads/2020/06/cats-22.jpg)
Che Guevara's birthplace put up for sale
Che Guevara's birthplace put up for sale : ”சே” என்று அனைவராலும் இன்றும் மரியாதையுடன் நினைவு கூறப்படுபவர் அர்ஜெண்டினாவை சேர்ந்த மருத்துவர் எர்னெஸ்டோ குவேரா. அர்ஜெண்டினாவின் மத்திய ரொசாரியோ பகுதியில் செல்வ செழிப்பான குடும்பம் ஒன்றில் 1928ம் ஆண்டு பிறந்தார் சே குவேரா. அவர் பிறந்த அந்த இடம் இன்றும் பலரால் நினைவில் கொள்ளப்படுகிறது. நியோ கிளாசிக்கல் ஸ்டைலில் கட்டப்பட்ட அந்த கட்டிடத்தின் மொத்த பரப்பு 2580 சதுர அடிகளாகும்.
2002ம் ஆண்டு, 240 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கட்டிடத்தை ஃப்ரான்சிஸ்கோ ஃபர்ருக்கியா என்பவர் வாங்கினார். கலாச்சார மையமாக அதனை மாற்றுவதாக அவர் கூறியிருந்த பட்சத்திலும் அதனை அவர் செய்யவில்லை. இந்நிலையில் அந்த கட்டிதத்தை தற்போது விற்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த கட்டிடத்திற்கான விலையை இன்னும் அவர் நிர்ணயிக்கவில்லை. இருந்த போதிலும் இந்த கட்டிடத்திற்கு வருகை புரியும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கடந்த நாட்களில் உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜோஸ் பெபெ முஜிக்கா மற்றும் ஃபிடல் கேஸ்ட்ரோவின் வாரிசுகள் இந்த கட்டிடத்திற்கு வருகை புரிந்துள்ளனர். மோட்டர் சைக்கிள் டைரியில் இடம் பெற்றிருந்த சேவின் உற்ற நண்பரான அல்பெட்ரோ க்ரானடோஸ் இந்த கட்டிடத்தை பார்வையிட்டுள்ளார். 1950களில் தென் அமெரிக்க மக்களின் வாழ்வியலை காண இவ்விருவரும் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us