நான் கஜமுகனை போன்றவன் – சொல்கிறார் சைக்கிளிங் போட்டியில் வாகை சூடிய சென்னைவாசி

Paris Cycling : பாரீஸ் சைக்கிளிங் போட்டியில் 1226 கிலோ மீட்டர் தூரத்தை 89 மணிநேரம் 1 நிமிடத்தில் கடந்து அசத்தியுள்ளார் சென்னயை சேர்ந்த 50 வயது இளைஞர் நிவெல்லி ஜே பிலிமோரியா.

By: August 29, 2019, 12:47:43 PM

பாரீஸ் சைக்கிளிங் போட்டியில் 1226 கிலோ மீட்டர் தூரத்தை 89 மணிநேரம் 1 நிமிடத்தில் கடந்து அசத்தியுள்ளார் சென்னயை சேர்ந்த 50 வயது இளைஞர் நிவெல்லி ஜே பிலிமோரியா.

பாரீஸ் – பிரெஸ்ட் – பாரீஸ் சைக்கிளிங் தொடர், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில், 65 நாடுகளிலிருந்து 7,300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களில் 335 வீரர்கள் இந்தியாவில் இருந்து பங்கேற்றிருந்தனர். 42 வீரர்கள் சென்னையில் இருந்து பங்கேற்று இருந்ததில், 8 வீரர்கள் மட்டுமே கட் ஆப் (அதிகபட்சம் 90 மணிநேரம் ) தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த 8 வீரர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார் சென்னையை சேர்ந்த பிலிமோரியா. இவர் தனது வெற்றியின் ரகசியத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, மற்ற வீரர்கள் எல்லாம் 4 நாட்கள் போட்டியில், 5 மணிநேரம் அளவிற்கு உறங்குவார்கள். நானோ யானை போல, நின்றபடியும், சைக்கிள் ஹேண்டில்பாரில் தலையை சாய்த்தபடி உறங்கிவந்தேன். அதிகம் உறங்கிவிடுவேன் என்ற காரணத்தினால், நான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். பாரீசில் வெப்பநிலை 3 டிகிரி முதல் 15 டிகிரி செல்சியஸ் வரைமட்டுமே இருக்கும். இந்த வெப்பநிலையை எதிர்கொள்ள மிகுந்த சிரமப்பட்டேன். இதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்வதற்காக, மலைப்பாங்கான இடங்களில் அதிகளவு பயிற்சி பெற்றதாக அவர் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chennai cyclist finishes in paris cycle race

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X