கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்த டாக்டர் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்ட சீனா

சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை தெரிவித்த டாக்டர் குடும்பத்திடம் சீன அரசு மன்னிப்பு தெரிவித்துள்ளது. அந்த டாக்டர் பின்னர், கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தார்.

சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை தெரிவித்த டாக்டர் குடும்பத்திடம் சீன அரசு மன்னிப்பு தெரிவித்துள்ளது. பின்னர், அந்த டாக்டரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தார்.

சீனாவில் டாக்டர் லி வென்லியாங் என்ற மருத்துவர் கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை தெரிவித்தார். அதனால், அந்நாட்டு போலீசாரால் அதிகாரப்பூர்வமாகக் கண்டிக்கப்பட்டார். பின்னர், அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தார்.

வுஹானில் உள்ள போலீஸ் படை டாக்டர் லி வென்லியாங்கின் அறிவுறுத்தலை புறக்கணித்ததோடு அது அவருக்கு கைது அச்சுறுத்தலையும் விடுத்தது என்று சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட ஒழுங்கு நடவடிக்கை அமைப்பு கூறியது.

மேலும், லி-யின் குடும்பத்திற்கு மனமார்ந்த மன்னிப்பு வழங்கியதாகவும் 2 போலீஸ் அதிகாரிகள் அவர்களின் குடும்பப் பெயர்களால் அடையாளம் காணப்பட்டு, இந்த வழக்கை தவறாக கையாண்டதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அவருடைய மரணத்தில், நோய் பரவல்கள், தொழில்துறை விபத்துக்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் நிதி மோசடிகள் குறித்து அதிகாரிகள் பொய் கூறுகிறார்கள் அல்லது மறைக்கிறார்கள் என்ற தகவல்கள், புகார்கள் மீதான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக கோபத்தைத் தூண்டும் முகமாக லி மாறினார்.

ஒரு மாதத்திற்கு முன்பு வுஹான் நகரத்தில் வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தபோது தினமும் ஆயிரக்கணக்கான புதிய நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு, வுஹானில் கடந்த வெள்ளிக்கிழமை தொடர்ந்து இரண்டாவது முறையாக புதிய உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகத்திற்குரிய நோயாளிகள் யாரும் பதிவாகவில்லை.

வுஹானைச் சுற்றியுள்ள மாகாணமான ஹுபெயில் சீனா சில பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இருப்பினும், அதன் மாகாண எல்லை மூடப்பட்டிருந்தாலும், வுஹான் மூடப்பட்ட நிலையில்தான் உள்ளது. வுஹானில் புதிய நோயாளிகள் பதிவு எதுவுமில்லாமல் தொடர்ச்சியாக 14 நாட்கள் சென்ற பின்னரே தனிமைப்படுத்துதல் நீக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து சமூக ஊடகங்களில் நண்பர்களை எச்சரித்ததற்காக லி உள்ளிட்ட 8 மருத்துவர்களை டிசம்பர் மாதம் போலீசார் கண்டித்தனர். சீனாவின் உச்ச நீதிமன்றம் பின்னர் காவல்துறையை விமர்சித்தது. ஆனால், ஆளும் கட்சி வைரஸ் வெடிப்புநிலை பற்றிய தகவல்களில் தொடர்ந்து தனது பிடியை இறுக்கமாக வைத்திருந்தது. இதற்கு முன்பு நடந்த பேரழிவுகளைத் தொடர்ந்தும் அக்கட்சி இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. சீனாவின் வடகிழக்கில் மில்லியன் கணக்கான மக்களுக்கு நீர் விநியோகத்தை சீர்குலைத்த 2005-ம் ஆண்டின் ரசாயன கசிவால் கடுமையான சுவாசக் கோளாறு நோய் அறிகுறிகள் பரவியது. கெட்டுப்போன பால் விற்பனை செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு நோய்வாய்ப்பட்டன. உலக பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் தனியார் நிதி நிறுவனங்களின் தோல்வியடைந்தன ஆகியவை அடங்கும்.

ஒவ்வொரு வழக்கிலும், மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறிய தகவல்களை மறைக்க அல்லது தாமதப்படுத்த முயற்சித்ததாக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கட்சி பெரும்பாலும் பொதுமக்களை தற்காலிகமாக வெளியேற்ற அனுமதிப்பதன் மூலம் பதில் நடவடிக்கை எடுக்கிறது. பின்னர், ஊடகங்கள் மற்றும் இணையத்தின் மீதான அதன் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி விமர்சனங்களைத் தடுக்கிறது. வதந்திகளை பரப்புவது அல்லது சிக்கலை ஏற்படுத்தியது என்ற தெளிவற்ற குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து விமர்சகர்கள் சிறையில் அடைக்கப்படக்கூடும்.

2012-ம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து சமூகத்தின் மீது கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய கட்சியும் அதன் தலைவரான ஜி ஜின்பிங் தலைமையிலான அரசை பாராட்டும் அதே வேளையில், முன்னணி சுகாதார ஊழியர்களின் தியாகங்களை சரியாக மதிக்கத் தவறியது குறித்த பொதுமக்களின் கோபத்தைப் பற்றி கவலையை லி வழக்கு பிரதிபலிக்கக்கூடும்.

1980-களில் இருந்து மிகவும் சக்திவாய்ந்த சீனத் தலைவரான ஷி ஜின்பிக் 2 முறை மட்டுமே என்ற வரம்பை நீக்க 2018-ல் சீன அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருப்பதற்கான விருப்பத்தை வழங்கினார்.

வுஹானில், உள்ளூர் தலைவர்கள் உள்ளூர் சட்டமன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில், திரைமறைவில் வைரஸ் பரவுவதை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்களிடம் டிசம்பர் மாதம் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

வைரஸ் பரவியதால், மருத்துவப் பொருட்களை நன்கொடையாகக் கோரும் சமூக ஊடகங்களில் இடப்பட்ட பதிவுகளை நீக்க மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இது பொதுப் பாதுகாப்பு புகார்களைக் காட்டிலும் அதிகாரிகள் தங்கள் பிம்பத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார்கள்.

டாக்டர் லி தனது முன்னாள் வகுப்பு தோழர்களுக்காக ஒரு சமூக ஊடக குழுவில் வைரஸ் குறித்து எச்சரித்த பின்னர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close