Advertisment

ரவூப் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்கும் முன்மொழிவு; இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர், ரவூப் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்கும் முன்மொழிவு; இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை

author-image
WebDesk
New Update
ரவூப் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்கும் முன்மொழிவு; இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை

China holds up proposal by India, US to list JEM chief Masood Azhar’s brother Abdul Rauf Azhar as ‘global terrorist’: பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவரும் ஜெய்ஷ்-இ முகமது (JeM) தலைவருமான மசூத் அசாரின் சகோதரரான அப்துல் ரவூப் அசாரை ஐக்கிய நாடுகள் சபையில் “உலகளாவிய பயங்கரவாதி”யாக அறிவிக்கும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.

Advertisment

அப்துல் ரவூப் அசாரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளதாகவும், சொத்துக்கள் முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதத் தடை போன்றவற்றுக்கு உட்படுத்தப்படுவதற்கும் சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வீட்டில் எஃப்.பி.ஐ சோதனை… உலகச் செய்திகள்

“பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இரட்டைத் தரத்தை வெளிப்படுத்தும் அதன் பதிலை சீனா சிந்திக்க வேண்டும். நன்கு அறியப்பட்ட பயங்கரவாதிகளை இந்த முறையில் தடை செய்வதிலிருந்து பாதுகாப்பது அதன் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு தன்னை மேலும் வெளிப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும்" என்று அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

அறியப்பட்ட பயங்கரவாதிகளின் பட்டியலில் சீனா தடைகளை ஏற்படுத்துவது இது முதல் முறையல்ல. இந்த ஆண்டு ஜூன் மாதம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல்-கொய்தா தடைக் குழுவின் கீழ் மற்றொரு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கியை பட்டியலிட இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து முன்மொழிந்ததை சீனா நிறுத்தி வைத்தது.

கடந்த காலங்களில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரும் ஐ.நா-வால் தடைசெய்யப்பட்டவருமான மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்கும் முன்மொழிவுகளை சீனா பலமுறை தடுத்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

China World News Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment