China had no role in Sri Lanka’s decision on ECT : கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் முனையம் திட்டம் தொடர்பாக இலங்கை சீனாவிடம் இருந்து எந்த விதமான அழுத்தமும் ஏற்படவில்லை என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தெனா கூறினார்.
சீனா எந்த வகையிலும் அழுத்தம் தரவில்லை. இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடாது என்றும், சீனா இந்தியா மற்றும் இலங்கையின் நட்புறவிலும் தலையிடாது என்றும் அவர் வீரகேசரி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அறிவித்தார்.
2019ம் ஆண்டு இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா நாடுகள் கொழும்பு துறைமுகத்தில் கண்டெய்னர் முனையம் அமைக்க முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் அதானி குழுமம் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய இருந்ததாக கூறப்பட்டது. ஈ.சி.டியுடன் சேர்ந்து சீனா கொழும்பு சர்வதேச கண்டெய்னர் முனையத்தில் 85% பங்குகளை கொண்டுள்ளது. இது 35 வருடங்களுக்கு போடப்பட்ட கட்டுமான மற்றும் பரிமாற்ற ஒப்பந்தமாகும். எனவே உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் ஒப்பந்தம் ரத்திற்கு சீனாவின் பங்கு இருக்கிறது என்று செய்திகள் வெளியிட்டது.
இந்திய உயர் ஆணையர் இந்த முடிவிற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் இந்த முடிவில் இந்தியாவிற்கு விருப்பம் இல்லை என்று அவர் தெரிவித்ததாக குணவர்த்தனே கூறினார். துறைமுக வியாபர சங்கங்கள் இந்த திட்டத்தில் வெளிநாட்டின் பங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் இம்முடிவு எட்டப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இலங்கை தரப்பில் ஏன் இந்த முடிவு எட்டப்பட்டது என்பதை நான் அவரிடம் விளக்கினேன். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் வெகுநாள் நட்பினை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனையை அணுக வேண்டும் என்று குணவர்தெனா கூறினார். மேலும் இந்தியா இந்த விவகாரத்தை பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும் என்றும் கூறினார்.