அமெரிக்க பொருட்களுக்கு 34% வரி; 16 நிறுவனங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடு: டிரம்ப் உத்தரவுக்கு சீனா பதிலடி

அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச வர்த்தக விதிகளுக்கு இணங்கவில்லை என்றும், சீனாவின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது எனவும், அந்நாட்டு ஸ்டேட் கவுன்சில் கட்டண ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச வர்த்தக விதிகளுக்கு இணங்கவில்லை என்றும், சீனாவின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது எனவும், அந்நாட்டு ஸ்டேட் கவுன்சில் கட்டண ஆணையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
China tariffs

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இறக்குமதி வரிகளை அதிரடியாக உயர்த்தியது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதித்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை உலகளாவிய வர்த்தக போரின் அபாயத்தை அதிகரித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Day after Trump’s tariff order, China hits back with 34% tariffs on all US products, ‘blocks’ 16 American entities

அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச வர்த்தக விதிகளுக்கு இணங்கவில்லை என்றும், சீனாவின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது எனவும், இது ஒருதலைப்பட்ச நடவடிக்கை எனவும் அந்நாட்டு ஸ்டேட் கவுன்சில் கட்டண ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தவிர 16 அமெரிக்க நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டில் சேர்க்கும் நடவடிக்கையிலும், 11 நிறுவனங்களை "நம்பகமற்ற" நிறுவனங்களாக வகைப்படுத்தும் திட்டங்களையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியது. 

Advertisment
Advertisements

"சட்டத்தின்படி, தொடர்புடைய பொருட்களின் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் செயல்படுத்துவதன் நோக்கம் தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களை பாதுகாப்பதாகும். மேலும், இது சர்வதேச கடமைகளை நிறைவேற்றும் நடவடிக்கை ஆகும்" என்று சீன வர்த்தக அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து சீன இறக்குமதிகள் மீதும் தற்போதுள்ள 20 சதவீத வரியுடன் கூடுதலாக 34 சதவீத பரஸ்பர வரிகளை அதிபர் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார். முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து ஏற்கனவே சீன இறக்குமதிகள் மீது 10 சதவீத கூடுதல் வரிகளை அவர் விதித்துள்ளார். கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இதற்கான உத்தரவை அவர் பிறப்பித்தார். சீனாவில் இருந்து சட்டவிரோத ஃபெண்டானில் ஏற்றுமதியை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கையாக இதனை வெள்ளை மாளிகை நியாயப்படுத்தியது.

அதன் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் அதே வேளையில், அமெரிக்க விவசாயப் பொருட்கள், எரிபொருள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க நிறுவனங்களை குறிவைத்து, மிதமான பதிலடி வரிகளுடன் சீனா இதற்கு முன்பு பதிலளித்தது.

வளர்ந்து வரும் பொருளாதார மோதல்கள் இருந்தபோதிலும், டிரம்ப் தனது ரோஸ் கார்டன் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மீதான தனது மரியாதையை தெளிவுபடுத்தினார். "எனக்கு ஜனாதிபதி ஜி மீது மிகுந்த மரியாதை உள்ளது. சீனா மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால், அவர்கள் எங்களிடமிருந்து மிகப்பெரிய நன்மைகளைப் பெறுகிறார்கள். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்" என்று டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்ப், அமெரிக்க வர்த்தக கூட்டாளிகளின் பட்டியலையும், அவர்கள் அமெரிக்கா மீது விதித்ததாக அவர் கூறிய வரி விதிப்புகளையும் பட்டியலிட்டு, தனது சமீபத்திய பரஸ்பர கட்டணங்களை நியாயப்படுத்தினார்.

டிரம்பின் கூற்றுப்படி, அமெரிக்க இறக்குமதிகள் மீது சீனா 67% வரிகளை விதிக்கிறது. இது நாணய கையாளுதல் மற்றும் வர்த்தக தடைகளின் தாக்கத்தை உள்ளடக்கியது.

பல மாதங்களாக, டிரம்ப் இந்த குறைபாடுகளை ஈடுசெய்ய பரஸ்பர கட்டணங்களுக்கு உறுதியளித்தார். மற்ற நாடுகள் பல ஆண்டுகளாக அமெரிக்காவை "கிழித்துவிட்டன" என்று அவர் வாதிட்டார்.

China America

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: