இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இப்போது பார்ப்போம்.
எல்லைப் பிரச்னைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் – சீனா உறுதி
இருதரப்பு உறவுகளின் "நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சிக்கு" இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகவும், 2020 முதல் பதற்றம் நிலவும் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதியாக இருப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: அமெரிக்க கடற்படையில் சீக்கியர்கள் தாடி, தலைப்பாகை வைத்துக் கொள்ள அனுமதி… உலகச் செய்திகள்
2022 ஆம் ஆண்டில் சர்வதேச நிலைமை மற்றும் சீனாவின் வெளிநாட்டு உறவுகள் குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய வாங் யி, இரு நாடுகளும் இராஜதந்திர மற்றும் ராணுவ வழிகள் மூலம் தொடர்பைப் பேணி வருகின்றன என்று கூறினார்.
கலிபோர்னியாவில் மேயராக சீக்கியர் தேர்வு
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லோடி நகரின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைக்கி ஹோதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார், நகரத்தின் வரலாற்றில் முதல் முதல் சீக்கிய மேயர் மைக்கி ஹோதி ஆவார்.
மைக்கி ஹோதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர் லிசா கிரெய்க் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டார், அவர் நவம்பரில் மேயர் மார்க் சாண்ட்லரின் இருக்கைக்கு தேர்தலில் வெற்றி பெற்றார் மற்றும் புதன்கிழமை நடந்த கூட்டத்தில் ஒருமனதாக துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். "லோடி நகரின் 117வது மேயராக பதவியேற்றதில் பெருமை அடைகிறேன்" என்று மைக்கி ஹோதி வெள்ளிக்கிழமை ட்வீட் செய்தார்.
சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா
ஷாங்காய்க்கு அருகிலுள்ள ஒரு பெரிய தொழில்துறை மாகாணமான சீனாவின் ஜெஜியாங், தினசரி ஒரு மில்லியன் புதிய COVID-19 நோய்த்தொற்றுகளுடன் போராடுகிறது, இது வரும் நாட்களில் இரட்டிப்பாகும் என்று மாகாண அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட தொற்று பாதிப்புகள் இருந்தபோதிலும், சனிக்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு சீனாவின் பிரதான நிலப்பரப்பில் COVID இறப்புகள் எதுவும் இல்லை என்று சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
மலேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் மரணம்
மலேசியாவில் முகாம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
டிசம்பர் 16 அன்று, கோலாலம்பூரில் இருந்து 50 கிலோமீட்டர் (31 மைல்) தொலைவில், சிலாங்கூர் மாவட்டத்தின் படாங் கலி நகரில் உள்ள ஒரு முகாமில் நிலச்சரிவு ஏற்பட்டது.
தொண்ணூற்று இரண்டு பேர் முகாமில் தூங்கிக் கொண்டிருந்தபோது டன் கணக்கில் மண் மற்றும் சேறு ஒரு மலையில் இடிந்து விழுந்தது. உயிரிழந்தவர்களில் 11 குழந்தைகள் உள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் மலேசியர்கள். முகாமில் இருந்த 61 பேர் மீட்கப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.