Sowmiya Ashok
China will support Pakistan's integrity : சீனாவின் தலைநகர் பெய்ஜிஙில் முதல் முறையாக பாகிஸ்தான் - சீனா இடையிலான வெளியுறவுத் துறை சார்பில் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் - சீனா பேச்சுவார்த்தை
அப்போது பேசிய சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் ஒய், பாகிஸ்தானிற்கு சீனா அளித்து வரும் ஆதரவை மறு உறுதி செய்து கொண்டார். உலகிலும், இந்த பிராந்தியத்திலும் எந்த மாற்றங்கள் நடந்தாலும், பாகிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, மற்றும் கண்ணியத்திற்கு ஒரு இழுக்கும் வராமல் சீனா பாதுகாப்பும் ஆதரவும் அளிக்கும் என்று கூறியுள்ளார்.
நன்றி கூறிய குரேஷி
பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் மமூத் குரேஷி பேசுகையில், பாகிஸ்தான் இக்கட்டான நேரங்களை சந்திக்கும் போதெல்லாம் ஆதரவாக துணை நின்ற சீனாவிற்கு நன்றியை கூறிக் கொண்டார்.
பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீர் பகுதியில் இருக்கும் புல்வாமாவில் ராணுவத்தினர் மீது ஜெய்ஷ் -இ- முகமது அமைப்பினரின் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. அப்போது 40 வீரர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து போர் மூழும் மிகவும் இக்கட்டான சூழல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மத்தியில் உருவானது. உலகநாடுகளின் தலையீட்டால் அந்நிலை மாறியது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வலியுறுத்திய போது சீனா அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குரேஷி மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மத்தியலான உறவு முறைப் பற்றியும், இந்தியப் பகுதியில் அமைந்திருக்கும் காஷ்மீர் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்தும் கூட நான் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசினேன் என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் அமைந்திருக்கும் காஷ்மீரின் பிரச்சனையை இந்தியர்கள் எப்படி அணுக வேண்டும் என்பதை அவர்கள் புதிய திட்டங்கள் மூலம் கொண்டுவர வேண்டும். அப்போது தான் இந்ந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவு வரும் என்று கூறினார்.
மேலும் படிக்க : மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை