கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘ஏழாம் அறிவு’ படத்தைப் பார்த்து, தமிழ் மொழியின் அழகைப் புரிந்துக் கொண்ட செளவ் ஸின்னுக்கு, தனது மாணவர்களுக்கு தமிழின் அழகை விவரிக்க வேண்டுமெனத் தோன்றியது.
”நம்முடைய மொழி மூலம் தான் கலாச்சாரத்தை தெரிந்துக் கொள்கிறோம்” எனத் தொடங்கும் செளவ், ”என் மாணவர்களுக்கு அழகைப் பற்றி பாடமெடுத்தால், அதற்கு உதாரணமாக ரஜினிகாந்த் அல்லது சூர்யாவின் படத்தைக் காட்டி, அவர்கள் நடித்தப் படங்களைப் பற்றிப் பேசுவேன்” என்கிறார். இவரது தமிழ் பெயர் ஈஸ்வரி. பெய்ஜிங் ஃபாரின் ஸ்டடிஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியையாகப் பணி புரிகிறார்.
”தமிழைப் பற்றியும், பரந்து விரிந்த இந்தியாவைப் பற்றியும் படிக்க, புதன் கிழமை மதிய வேளையில் 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஆஸ்கர் விருது வாங்கியிருக்கும் ‘பீரியட்’ படத்தை மாணவர்கள் பார்த்து ரசித்தனர்.
இந்த படிப்பு 6 மாதங்களைக் கொண்டது. ஒரு பக்க சீன வார்த்தைகள் 2 பக்க தமிழ் வார்த்தைகள்” எனும் செளவ் அவரது மாணவர்களுக்கு தமிழில் எண்களை நினைவு வைத்துக் கொள்வது தான் சிரமமாக இருப்பதாகக் கூறுகிறார்.
திருவள்ளுவரின் திருக்குறள், சுப்பிரமணிய பாரதியின் கவிதைகள், சங்ககால இலக்கியங்கள் ஆகியவற்றை தனது மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார் செளவ். வாரத்தில் 3 நாட்கள் தமிழ் எழுத்துகளும் சொல்லிக் கொடுக்கப் படுகிறது. செளன் தோழி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கலதி காம்ப்ளிமெண்டாக பேச்சுத் தமிழைக் கற்றுத் தருகிறார்.
முன்பு சீன சர்வதேச வானொலியில் தமிழ் அறிவிப்பாளர் மற்றும் டிரான்ஸ்லேட்டராக இருந்த செளன், தமிழைக் கற்றுக் கொள்ள, புதுச்சேரி சென்று 7 மாதம் தங்கியுள்ளார். அவரது தோழி கலதி, ஜெ.என்.யூ-வில் எம்.பில், பி.ஹெச்.டி முடித்தப் பிறகு சீன மொழியைக் கற்றுக் கொள்ள பெய்ஜிங் பறந்துள்ளார்.
பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் தமிழ் வகுப்பு தொடங்க நீண்ட நாள் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. ஆனால், பயிற்றுவிப்பாளர் இல்லாத காரணத்தால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்திருக்கிறது. 2017-ல் லண்டனில் இருந்து திரும்பிய செளனுக்கு, நாம் ஏன் தமிழ் துறையை துவங்கக் கூடாதென எண்ணம் எழுந்திருக்கிறது. இறுதியாக 6 மாதம் கழித்து அந்த கனவு நனவாகியிருக்கிறது.
பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் தமிழ் மற்றும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. 10 வருடத்திற்கும் மேலாக இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. சமீபத்தில் வங்காளமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு பஞ்சாபியும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
”சீனாவில், சமஸ்கிருதம் மற்றும் இந்தியை அறிந்த பலர், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற புராணங்களை மொழி பெயர்த்துள்ளனர். தமிழில் பல படைப்புகள் உள்ளன, ஆனால் யாரும் மொழி பெயர்க்கவில்லை” என்கிறார் செளன்.
”என்னுடைய மாணவர்கள் செந்தமிழைப் பயில்கிறார்கள். அதனால் அவர்கள் பிற்காலத்தில் என்னைப் போல் ஆசிரியராக வருவார்கள் என நம்புகிறேன். அதோடு சிலவற்றை மொழிப்பெயர்க்கவும் முடியும். புத்த மதத்தைப் பற்றிய ’மணிமேகலையை’ எனது கிளாஸிக் ஒர்க்காக எடுத்துள்ளேன். இது சீனாவில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்” என்கிறார்.
செளன் மாணவி துர்கா (யூயான் மிங்ஸி), தனது பெயரை ராஜஸ்ரீ என மாற்றியிருக்கிறார். “எனது நண்பர்கள் என் பெயரை உச்சரிக்க சிரமப் படுகிறார்கள். அதனால் தான் மாற்றிக் கொண்டேன்” எனும் ராஜஸ்ரீ, ஷாருக் கான் நடித்த மொஹாபட்டென் படத்திலிருந்து ஒரு பாடலைப் பாடுகிறார். ”தமிழுக்கு பதில் இந்தி கற்றுக்கொள்ள விருப்பமா?” எனக் கேட்டதற்கு, ”எனக்கு 2 மொழிகளையும் கற்றுக் கொள்ள விருப்பம்” என்று கூறி புன்னகைக்கிறார்.