சீன ராணுவ ஆய்வுக் கப்பல் ‘யுவான் வாங் 5’ ஆகஸ்ட் 16, 2022 அன்று இலங்கையின் அம்பன் தோட்டாவில் உள்ள அம்பன் தோட்டா சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கையில் உள்ள சீனத் தூதுவர் செவ்வாய்க்கிழமை தெற்கு அம்பன் தோட்டா துறைமுகத்திற்கு உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பல் வருகை தொடர்பான சர்ச்சையைக் குறைத்து மதிப்பிடும் விதமாக, அத்தகைய ராணுவக் கப்பல்கள் வருகை மிகவும் இயல்பானது என்று கூறினார்.
சீன பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ உள்ளூர் நேரப்படி காலை 8.20 மணிக்கு தெற்கு அம்பன் தோட்டா துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் ஆகஸ்ட் 22 வரை அங்கே நிறுத்தப்படும்.
இந்த கப்பல் முதலில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி துறைமுகத்தை வந்தடைய திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த கப்பலை இலங்கை அதிகாரிகள் அனுமதிக்காததால் தாமதமானது.
இந்த ராணுவக் கப்பல் வருகையை இந்தியா ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டது. சனிக்கிழமையன்று, ஆகஸ்ட் 16 முதல் 22 வரை, அந்த கப்பல் துறைமுகத்திற்கு வருவதற்கான அனுமதியை கொழும்பு வழங்கியது.
குறிப்பிட்ட காலப்பகுதியில் கப்பலில் எரிபொருள் அல்லது பொருட்கள் நிரப்பும் நோக்கத்திற்காக வருகை தருவதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தால் அனுமதி வழங்கப்பட்டது என்று இலங்கை தெரிவித்துள்ளது.
சீன கப்பலை வரவேற்க இலங்கைக்கான சீனத் தூதர் குய் சென்ஹாங் அம்பன் தோட்டா துறைமுகத்திற்கு வந்திருந்தார்.
இந்த நிகச்சியில், இலங்கையில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
சீன ராணுவக் கப்பல் வருகை குறித்து செய்தியாளர்கள் ஜென்ஹாங்கிடம் கேட்டபோது, “இலங்கைக்கு இத்தகைய ஆராய்ச்சிக் கப்பல் வருகை தருவது மிகவும் இயல்பானது. 2014-இல் இதேபோன்ற ஒரு கப்பல் இங்கு வந்தது” என்று கூறினார்.
சீன கப்பலின் வருகை குறித்து இந்தியர்கள் கவலை தெரிவித்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எனக்குத் தெரியாது, நீங்கள் அதை இந்திய நண்பர்களிடம்தான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.
சீன கப்பல் அம்பன் தோட்டா துறைமுகத்துக்கு வந்ததை அடுத்து, இந்த கப்பலில் யாரையும் அனுமதிக்கப்படாமல் மிகக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த கப்பலின் வருகை ஜூலை நடுப்பகுதியில் அனுமதிக்கப்பட்டு, இலங்கையின் இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டதால் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த கப்பல்ன் வருகை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தனா, பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டதாக தெரிவித்தார். “எங்களுக்கு எல்லா நாடுகளுடனும் உறவுகள் முக்கியம்” என்று குணவர்தனா கூறினார்.
சீனக் கப்பல் வாங் யாங் 5 சிக்கலைக் கையாள்வதில் அண்டை நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள சீன இராணுவக் கப்பல்களை இந்தியா ஆரம்ப காலத்தில் இருந்தே கடுமையாகப் பார்க்கிறது. கடந்த காலங்களில் இலங்கையுடனான இத்தகைய பயணங்களுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2014 இல் அணுசக்தியால் இயங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பலை இலங்கையின் துறைமுகம் ஒன்றில் நிறுத்த கொழும்பு அனுமதித்ததை அடுத்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவுகள் விரிசலுக்கு உள்ளானது.
உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் இலங்கையின் பிரதான கடன் வழங்குனராக சீனா உள்ளது. சீனக் கடன்களின் மறுசீரமைப்பு, பிணை எடுப்புக்கான சர்வதேச நாணய நிதியத்துடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் இலங்கயின் வெற்றிக்கு முக்கியமானதாக உள்ளது.
மறுபுறம், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கையின் உயிர்நாடியாக இந்தியா இருந்து வருகிறது.
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் தீவு நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்த ஆண்டில் இலங்கைக்கு கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருளாதார உதவிகளை வழங்குவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தியாவின் கவலை குறிப்பாக அம்பன் தோட்டா துறைமுகத்தில் குவிந்துள்ளன. 2017 இல், இலங்கை தனது கடனைத் திருப்பிச் செலுத்தும் கடப்பாடுகளைக் கடைப்பிடிக்க முடியாமல் போனதை அடுத்து, கொழும்பு தெற்கு துறைமுகத்தை சைனா மெர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”