Advertisment

கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர் : பொருளாதார நெருக்கடியை சமாளிப்பாரா க்றிஸ்டியா?

வெளியுறவுத்துறை, சர்வதேச வர்த்தகம் மற்றும் உள்நாட்டு அரசியல் உறவுகள் போன்ற துறையில் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார் க்றிஸ்டியா. 

author-image
WebDesk
New Update
Chrystia Freeland named Canada's first female finance minister

Chrystia Freeland named Canada's first female finance minister : கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் கனடாவின் துணை பிரதமர் க்றிஸ்டியா ஃப்ரீலேண்ட். கனட நாட்டு பிரதமர் ஜஸ்டினின் நம்பிக்கைக்குரிய வட்டங்களில் ஒருவராக க்றிஸ்டியா விளங்கி வருகிறார். எதிர்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணமாக இதற்கு முன்பு பதவி வகித்த பில் மோர்னியோ தன்னுடைய நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் கூடுதல் பொறுப்பினை ஏற்க உள்ளார் க்றிஸ்டியா.

Advertisment

கொரோனா நோய் தொற்றின் காரணமாக அந்நாட்டில் மாபெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவு 300 பில்லியன் கனட டாலர்கள் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது போன்ற இக்கட்டான நிலையில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் பில். தற்போது ஆர்கனிஸேசன் ஃபார் எக்கானமிக் கோ-ஆப்ரேசன் அண்ட் டெவலப்மெண்ட் என்ற நிறுவனத்தின் பொதுச்செயலாளர் பதவியை பெறுவதற்கான முயற்சிகளில் பில் இறங்கியுள்ளார்.

52 வயதான முன்னாள் ஊடகவியலாளர் 2013ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினரானார். வெளியுறவுத்துறை, சர்வதேச வர்த்தகம் மற்றும் உள்நாட்டு அரசியல் உறவுகள் போன்ற துறையில் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார் க்றிஸ்டியா.  நிதி அமைச்சர் பதவியை கூடுதலாக வகிக்க இருக்கும் இவர், கனடாவின் பொருளாதாரம் விரைவில் சரியாகிவிடும். அதற்காக பல்வேறு திறன் மிக்க முடிவுகளை மேற்கொள்ள இருக்கின்றோம். அதற்கு கனட மக்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Canada
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment