திருநங்கைகளுக்கு அங்கீகாரம்: பாகிஸ்தான் நாடு என்ன செய்தது தெரியுமா?

உலகிலேயே இஸ்லாமிய நாடுகளில் திருநங்கைகளுக்கான ஒரே பள்ளி கூடம் இதுவாகும் .

பாகிஸ்தானில் உள்ள திருநங்கைகள் அவர்களின் கல்வி மற்றும் பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள அவர்களுக்காக தனி பள்ளியை  அந்நாடு அரசாங்கம் துவக்கியுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள் என்றாலே  ஓதுங்கி நிற்பவர்கள் மத்தியில், பாகிஸ்தான் அரசாங்கம் அவர்கள் படிப்பதிற்காகவே தனி பள்ளியை உருவாக்கி தந்துள்ளது. பாகிஸ்தானில் அதிக மக்கள் தொகை கொண்ட 2வது நகரம் லாஹூர்.  இங்கு 30 ஆயிரம் திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.

இந்த திருநங்கைகளுக்காக,  பிரத்யேக பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. தி ஜென்டர் கார்டியன்  என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த தொழிற் பயிற்சி பள்ளியில், தொடக்க கல்வியில் இருந்து 12ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரி வரை பயிலலாம்.மேலும் இந்த பள்ளிய ல் சமையல், பேஷன் டிசைனிங், காஸ்மெடிக்ஸ் உள்ளிட்ட 8 துறைகளில் பயிற்சி அடிப்படையிலான படிப்பும் அளிக்கப்படுகின்றது.

8 துறைகளில் பயிற்சி அளிக்கும் வகையிலான வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.  நேற்று(16.4.18) முதல் நாளாக இந்த பள்ளிக் கூடத்தில் வகுப்புக்கள் நடைப்பெற்றன. இதுவரை இந்த பள்ளியில்,  40 திருநங்கைகள் தாமகவே முன்வைந்து  சேர்ந்துள்ளனர். உலகிலேயே இஸ்லாமிய நாடுகளில் திருநங்கைகளுக்கான ஒரே பள்ளி கூடம் இதுவாகும் .

இங்கு பயில இருக்கும் திருநங்கைகளுக்காக 15 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் மாணவர்களாக சேர்வதற்கு எந்த வயது வரம்பும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து பெருமையுடன் பேசிய  பள்ளி உரிமையாளர் ஆசிப் ஷாஜத்” சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த திருநங்கைககளுக்கு கல்வி வழங்க இந்த பள்ளி கூடம் தொடங்கப்பட்டு உள்ளது.  அவர்கள் குழந்தையாக இருந்ததில் இருந்து தனியாக வாழ வற்புறுத்தப்படுவது துரதிருஷ்டமிக்கது.  இந்த பள்ளி அவர்களுக்காக மட்டும் தான். கண்டிப்பாக அவர்களும் இந்த சமுதாயத்தில் அனைவரும் அன்னாந்து பார்க்கும் இடத்திற்கு வருவார்கள” என்று தெரிவித்துள்ளார்.

 

 

×Close
×Close