முக்கிய நகரங்களை கைப்பற்றும் சிரிய கிளர்ச்சி படை: குடிமக்களுக்கு இந்தியா முக்கிய அறிவுறுத்தல்

சிரியாவின் அலெப்போவில் புதிய கட்ட போர் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலால் சிரிய அதிபர் பஷார் அசாத் அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த 2016-க்கு பிறகு கிளர்ச்சியாளர்களின் முதல் தாக்குதல் இதுவாகும்.

சிரியாவின் அலெப்போவில் புதிய கட்ட போர் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலால் சிரிய அதிபர் பஷார் அசாத் அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த 2016-க்கு பிறகு கிளர்ச்சியாளர்களின் முதல் தாக்குதல் இதுவாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Syria issue

சிரியாவின் "இராணுவ எதிர்ப்புக் கட்டளை" ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவைக் கைப்பற்றியது. மேலும், மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸுக்குள் கிளர்ச்சியாளர்கள் நுழைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடிமக்களை விரைந்து வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Leave at the earliest’: India‘s advisory for its citizens as rebels seize major cities in Syria

சிரியாவில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை சிரிவாவிற்கு மேற்கொள்ளும் பயணங்களை இந்தியர்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தற்போது சிரியாவில் உள்ள இந்தியர்கள் டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்தை, +963 993385973 என்ற அவசர உதவி எண் மூலமாகவும்,  hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கிடைக்கூடிய வணிக விமானங்கள் மூலம் வாய்ப்புள்ளவர்கள் விரைவாக வெளியேறவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

முன்னதாக, சிரியாவின் நிலைமையை கூர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சக  செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார். “சிரியாவின் வடக்குப் பகுதியில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள தாக்குதலை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். சிரியாவில் சுமார் 90 இந்தியர்கள் உள்ளனர். இதில் 14 பேர் பல்வேறு ஐ.நா அமைப்புகளில் பணிபுரிகின்றனர் ”என்று அவர் கூறினார். 

சிரியாவில் என்ன நடக்கிறது?

இது அனைத்தும் அலெப்போவில் தொடங்கியது. இது சிரிய அதிபர் பஷார் அசாத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2016 க்குப் பிறகு, கிளர்ச்சி படைகள் இதனை கைப்பற்றியுள்ளனர். முன்னதாக, ரஷ்ய விமான தாக்குதலுக்கு பின்னர், கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த இந்த நகரத்தை அசாத் மீட்டெடுத்தார்.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) குழுவின் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள், வியாழன் அன்று தெற்கு நோக்கி நகருவதற்கு முன்பாக ஹமா நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதேபோல், இரண்டு முக்கிய நகரங்களும் அவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. சிரிய அரசு டெரா நகரிலும் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்புடன், சிரிய தேசிய இராணுவம் எனப்படும் துருக்கிய ஆதரவு சிரிய கிளர்ச்சியாளர்களும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைவர் அல்-கோலானி கடந்த வியாழன் அன்று CNN க்கு பிரத்யேக நேர்காணல் அளித்திருந்தார். அதில்,  ரஷ்யா மற்றும் ஈரானால் அசாத்தின் அரசு வீழ்ச்சியடையும் பாதையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர்ர் செர்ஜி லாவ்ரோவ், ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளரான டக்கர் கார்ல்சனுடன் இந்த பிரச்சனை குறித்து கலந்துரையாடினார். அப்போது, தனது துருக்கிய மற்றும் ஈரானிய சகாக்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறினார். மேலும், "சர்வதேச நடிகர்கள் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றங்களை ஆதரிக்கின்றனர். அவர்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதம் கிடைப்பதற்கான வழியை குறைப்பது குறித்து நாங்கள் விவாதிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Syria Attack

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: